தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸின் சில தலைவர்கள் ‘ஆட்சியில் பங்கு வேண்டும்’ என சூளுரைத்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாணிக்கம் தாகூர், பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோர் நேரடியாகவே திமுவிடம் தினமும் ஒரு கேள்வியை எழுப்பி வருகிறார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலினோ, “ஆட்சியில் பங்கு என்ற வாதம் தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது” என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இருப்பினும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும். 150-160 தொகுதிகள் வரை வெற்றி பெறும். உதய சூரியன் சின்னம் என்றால் ஒரு மாதிரி…. மற்ற சின்னம் என்றால் ஒரு மாதிரி….” என்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் கருத்துக்கு கடும் அதிருப்தியில் இருக்கும் மாணிக்கம் தாகூர் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று கூறிவருகிறார்.

இந்தநிலையில், இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அமைச்சரவையில் காங்கிரஸுக்கும் பங்கு அளிக்கப்படவேண்டும், அதிகப்படியான தொகுதிகளை பெறவேண்டும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் 30% இடங்களை பெறவேண்டும் உள்ளிட்ட அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது திமுக தலைமை மீண்டும் நெருக்கடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version