தூத்துக்குடியில் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் தாலுகா வெள்ளாளன்விளை கிராமத்தில் உள்ள துாய பரிசுத்த கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர். மோசஸ் என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார். சாத்தான்குளம் தாலுகா மீரான்குளம் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் கவிழ்ந்தது.
காருக்குள் சிக்கிய மோசஸ், அவரது மனைவி வசந்தா, உறவினர் ரவி, மீட்கப்பட்ட ஹெர்சோமின் ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின், ஹெத்சியா ஆகியோர் வெளியே வர முடியாமல் தவித்து காருக்குள் இருந்தபடியே நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்க முடியாமல் தீயணைப்பு படையினர் திணறி வந்தனர். சாத்தான்குளம், திசையன்விளை, திருநெல்வேலி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வந்த 5 தீயணைப்பு வாகனங்கள், இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் உதவியோடு கிணற்றுக்குள் மூழ்கியை காரையும், காருக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
