சுழற்சி அடிப்படையில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில் நிதித்துறை செயலாளராக வெங்கடேஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சங்கர் ஐஏஎஸ் உயர்கல்வித்துறை செயலாளராகவும், வள்ளலார் ஐஏஎஸ் சமூக சீர்திருத்தத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகராஜன் ஐஏஎஸ் வணிகவரித்துறை ஆணையராகவும், சமயமூர்த்தி ஐஏஎஸ் மனிதவள மேலாண்மை துறை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிதித்துறை செயலாளராக வெங்கடேஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.