சாம்சங் நிறுவனத்தின் பணி நீக்கம் செய்யப்பட்ட 23 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க அரசு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் சாம்சங் நிறுவனம் இதில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பணி பாதுகாப்பு ஊதிய உயர்வு தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்று பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் . அது தொடர்ந்து அரசின் சார்பில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது தொடர்ந்து போராடும் கைவிடப்பட்டது .
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்ட ஊழியர்களை சாம்சங் நிறுவனம் பணிநீக்கம் செய்ததால் அவர்களை மீண்டும் பணி வேண்டும் என்று சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர் . தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி கணேசன் தலைமையில் சாம்சங் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் தற்போது முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வி கணேசன் செய்தியாளர்கள் சந்தித்தார் அப்பொழுது அவர் பேசுகையில் ஊதியம் உயர்வு பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி சாம்சங் தொழிற்சங்கத்தினர் , சாம்சங் நிறுவனம் எனது தலைமையில் இன்று பேச்சு வார்த்தை நடைபெற்றதாகும் இதில் சமூகமான தீர்வு எட்டப்பட்டிருப்பதாகவும் ஊதியம் உயர்வானது 2025 26 ஆம் ஆண்டுக்கு ஒரு தொழிலாளிக்கு 9 ஆயிரம் ரூபாயும், 26-27 ஆண்டுக்கு 4500 ரூபாயும் ,27-28 ஆண்டிற்கு 4,500 ரூபாயும் வழங்கப்படும் என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டு அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை சமூகத் தீர்வு எட்டிருப்பதாக அவர் தெரிவித்தார் .
இந்த நிறுவனம் 23 தொழிலாளர்களை பணி இடை நீக்கம் செய்துள்ளது. அவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து தொழிலாளர் நலத்துறை முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் நிச்சயமாக அந்த ஊழியர்களை அந்த நிறுவனத்தில் மீண்டும் பணியாற்றுவோம் .
ஏற்கனவே வேலை நிறுத்தம் நடைபெறும் பொழுது இவர்களின் கோரிக்கை தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அனைத்து தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று அந்தப் போராட்டம் முடித்து வைக்கப்பட்டதாகவும் , இந்த ஊழியர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக நிச்சயம் நல்ல தீர்வு வரும் என அவர் தெரிவித்தார் .