திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுக்கா, ஏம்பலம் அடுத்த சோகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் வயது லாரி ஓட்டுநர்.இவர் வயதான தனது தாய் நவநீதம் என்பவரோடு வாழ்ந்து வருகிறார். விஜயகுமார் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

விஜயகுமார் திருமணம் செய்ய பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடமாக பெண் தேடிவந்துள்ளார். திருமணத்திற்கு பெண் கிடைக்காத நிலையில் நண்பர்களோடு உதவியோடு ஒரு சமூகத்தைச் சார்ந்த வன்னியர் மேட்ரிமோனி வலைதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளார்.

விஜயகுமார் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள நிலையில் பெரிதாக சமூக வலைதளத்தில் அனுபவம் இல்லாததால் வரன்கள் பார்ப்பதில் இவருக்கு ஆர்வம் இல்லாமல் செல்போனில் இருந்த தனியார் வரன் பார்க்கும் வன்னியர் மேட்ரிமோனி செயலியை மட்டும் டெலிட் செய்துள்ளார். ஆனால் பதிவை நீக்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் பிப்ரவரி மாதம் விஜயகுமாருக்கு பிரியங்கா என்ற 28 வயது பெண்மணி போன் செய்து மாப்பிள்ளை வீடு பார்க்க வருகிறோம் நான் தான் மணப்பெண் என்று கூறியுள்ளார்.

விஜயகுமாரும் தாயிடம் சொல்லியுள்ளார். பிரியங்கா உறவினர்களோடு ஜெயக்குமார் வீட்டுக்கு சென்று டீ காபி குடித்துவிட்டு பின்னர் மீண்டும் வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு சென்றுள்ளனர்

கடந்த மாதம் விஜயகுமார் வீட்டிற்கு சென்ற பிரியங்கா விஜயகுமாரின் வீட்டில் சாப்பிடும் போது விஜயகுமாருக்கும் விஜயகுமார் தாயாருக்கும் தெரியாமல் சாப்பாட்டில் மயக்க மருந்தை கலந்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அவர்கள் மயக்கம் அடைந்தவுடன் விஜயகுமார் திருமணத்துக்காக வைத்திருந்த 3.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நாலு பவுன் தங்க நகைகளை பிரியங்கா மற்றும் அவரோடு வந்தவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

மயக்கம் அடைந்த விஜயகுமார் மற்றும் அவர்கள் தாயார் அடுத்த நாள் காலை எழுந்து பார்க்கும் போது வீட்டில் பணம் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து விஜயகுமார் தெள்ளார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் பிரியங்கா சம்பந்தப்பட்ட நபர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் தனக்கு பாதுகாப்பு வேண்டுமென்றும் அவர்களை உடனடியாக பிடித்து கைது செய்ய வேண்டும் தனது நகை மற்றும் பணத்தை மீட்டுக் கொடுக்க கோரி இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version