மதுரை உலக தமிழ்சங்க கூட்டரங்கில், கவிஞர் வைரமுத்துவின் தலைமையில் வெற்றி தமிழர் பேரவையின் மறுசீரமைப்புக்கூட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள், மருத்தவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

நிகழ்வில் புதிய நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து கவிஞர் வைரமுத்து வாழ்த்தினார்.

 

பின்னர் உரையாற்றிய அவர், “தமிழர்களின் நாகரிகம் என்னவென கேட்டால், ‘திருக்குறள்’ என்று கூறுங்கள். திருவள்ளுவர் நம் ஞானத் தந்தை,” என தெரிவித்தார். மேலும், “மனிதவளத்தை சீரழிக்கும் மதுவும் புகையும் இனிமேல் தொடமாட்டோம் என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்,” எனக் கேட்டார். நிகழ்வில் அனைவரும் எழுந்து உறுதிமொழி எடுத்தனர்.

 

“2 மலையாளிகள் சந்தித்தால் டீ கடை, 2 தமிழர்கள் சந்தித்தால் போலீஸ் ஸ்டேஷன்” என சமூகப் பராமரிப்பில் தமிழர்களிடையே ஒற்றுமை குறைவைக் குறிப்பிட்ட அவர், இங்கு தமிழர்கள் ஒருமித்திருப்பது பெருமை என குறிப்பிட்டார்.

 

மதுவால் ஒரு குடும்பம் நாசமாகும், ஒரு மகன் தாயை மதிக்காமலும் போகலாம் என்றும், “வெற்றி தமிழர் பேரவை உறுப்பினர் என்ற பெயர் சொல்போதே பெண் தர யோசிக்க கூட வேண்டாம் என்ற நம்பிக்கையை உருவாக்குங்கள்,” என்றும் வலியுறுத்தினார்.

 

அதன்பின், கவிஞர்கள் அனுப்பிய அஞ்சல்கார்டு கவிதைகள் குறித்து அவர் பேசினார். “தயவுசெய்து திறந்துபார்க்காதீர்கள் – மேக்கப் இல்லாமல் தூங்குகிறாள்,” என நடிகையின் கல்லறையில் எழுதியிருந்த கவிதை, “தண்ணீரில் மிதந்தவன் மூழ்கிவிட்டான்,” எனவே தொழிலாளரின் சோகமும், “இங்கும் கரையான்கள் சுரண்டுகிறார்கள்,” என தொழிலாளர்களின் நிலைபாடும் குறிப்பிடப்பட்டன.

 

அரசியல்வாதியின் கல்லறையில் “தயவுசெய்து கைதட்டாதீர்கள், எழுந்துவிடப்போகிறார்” என எழுதியிருந்த கவிதையையும் அவர் மேற்கோளிட்டார்.

 

இவை குறித்து, “விமர்சனத்திற்கு உட்படுவதே வளர்ச்சி, ஊர் விமர்சித்தால் வளர்கிறோம், சொந்தங்கள் பரிகாசித்தால் நம்மில் உண்டு ஒரு வெற்றி” எனக் கூறினார்.

 

நிகழ்வு முடிவில், புதிய உறுப்பினர்களுடன் வைரமுத்து குழுவாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version