அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் பரிசு தொகுப்பு, பரிசுத் தொகை உள்ளிட்டவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான, முந்தைய அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுக்கப்பட்டது. அப்போது 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை.
இருப்பினும், இந்தாண்டுக்கான பொங்கல் பரிசுக்காக மக்கள் எதிர்பார்த்துக்காத்திருக்கின்றனர். பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளன. அத்துடன் ரொக்கப்பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் எவ்வளவு தொகை என்று ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
இந்தநிலையில், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதில் பேசியதாவது, அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். அதாவது, புதிய தேர்தல் வாக்குறுதியாக அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ரூ.5,000 பொங்கலுக்கு வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சி வந்ததும் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். பெண்களுக்கு தீபாவளி சேலை வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். மீன்பிடி தடைகால நிதி உயர்த்தி வழங்குவதோடு, மீனவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்” என கூறினார்.
