சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலைய வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னை மண்ணடி மரக்காயர் தெருவை சேர்ந்த கனி என்கிற வரிசை கனியிடம் பிளாட் வாங்குவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு 35 லட்சம் ரூபாய் பணம் கொடுத்த நிலையில் வாங்குவதில் சட்ட பிரச்சனைகள் இருப்பதாக கூறியதை எடுத்து பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.ஆனால் பணத்தை கொடுக்காமல் கடந்த ஐந்து வருடங்களாக கேட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று மன்சூர் அலிகான் அவர்களின் மகன் துக்ளக் மண்ணடி பகுதிக்கு வந்து பணத்தை கேட்ட போது கனி தனது வீட்டை பூட்டிக்கொண்டு காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் போலீசார் வந்து அவர்கள் அனைவரையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் விசாரணை மேற்கொண்டு வடக்கு கடற்கரை போலீசார் சட்டவிரோதமாக கூடுதல் ஆபாசமாக பேசுதல் மிரட்டல் அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீதிமன்றத்தில் சென்று பணத்தை பெற்றுக் கொள்வதாக இரு தரப்பினரையும் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்
இது சம்பந்தமாக துக்ளக் மீது வழக்கு பதிவு செய்த காவல் நிலைய ஆய்வாளர் வேண்டுமென்றே இது அவதூறு பரப்ப வேண்டும் என்கிற அடிப்படையில் இதை செய்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.100-க்கு போன் செய்து புகார் அளித்தவுடன் என்ன ஏது என்று கூட ஆதாரம் இல்லாமல் சிசிடிவி கேமரா காட்சிகள் கூட இல்லாத நிலையில் அக்கம்பக்கத்தினர் அவர் வீட்டை பூட்டி கொண்டார் என கூறியும் கூட என் மகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவனுடன் பழகிய அனைவருக்கும் தெரியும் அவன் எவ்வாறு பேசுவான் நடந்து கொள்வான் என்று அவதூறாக பேசியதாகவும் தகாத வார்த்தைகளில் பேசியதாக வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அவனுக்கும் திருமணமாக வேண்டும் அவனது தங்கைகளும் உள்ளனர். அவை வாழ்க்கையை ஏன் காவல்துறை இதுபோன்று செய்கிறார்கள். ஏன் வழக்கு பதிவு செய்தீர்கள் என கேட்டதற்கு ஆய்வாளர் விஜயகாந்த் அடிஷனல் கமிஷனர் தான் வழக்கு பதிவு செய்ய சொன்னார் என கூறுகிறார். எங்கேயோ ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு இங்கு என்ன நடப்பது என்பது குறித்து தெரியாமல் வழக்கு பதிவு செய்ய சொல்வது நியாயமா?. இது போன்று தான் திருபுவனத்தில் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்டார். ஒரு சில காவல்துறையினர் நன்றாக இருந்தாலும் பல பேர் இதுபோன்று நடந்து கொள்கிறார்கள் என தெரிவித்தார்.
கஞ்சா அடித்தார் என தெரிந்தவுடன் தன் மகனை நானே அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். போலீசார் என் முன்னிலையில் தான் கைது செய்தார்கள். தவறு செய்யும் பட்சத்தில் ஒரு தந்தையாக நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தேன். ஆனால் எந்த தவறும் செய்யாத போது தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது குறித்து ஒரு தந்தையாக நான் கேட்க தான் வேண்டும் என தழுதழுத்த குரலில் கூறினார்.
எனவே காவல்துறை தன் மகன் மீது பதியப்பட்டுள்ள வழக்கு பதிவை ரத்து செய்ய வேண்டும் இது சம்பந்தமாக வடபழனி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன் விசாரணை நடத்தி எனது படத்தை பெற்று தருமாறும் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.