Close Menu
    What's Hot

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»திராவிட இயக்கங்களால் தான் தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருக்கின்றது – உதயநிதி
    அரசியல்

    திராவிட இயக்கங்களால் தான் தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருக்கின்றது – உதயநிதி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1939343 udhayanidhistalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நூற்றாண்டு தொடக்க விழா, 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது,

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு செவிலியர்களுக்கு விருதுகளை வழங்கி விழா பேருரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த ஒரு வாரமாக முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். நேற்று நலமாக முதலமைச்சர் வீடு திரும்பியுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள்., செவிலியர்களுக்கு இந்த மேடையில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,

    நீதிக்கட்சி நிறைவேற்றிய சட்டம் தான் சட்டபூர்வமாக செவிலியர்களுக்கு ஒழுங்கு முறையை வழங்கியது. இந்த கவுன்சில் தான் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட செவிலியருக்கான முதல் கவுன்சில்.இந்த செவிலியர் கவுன்சில் தான் நூற்றாண்டு கண்ட உலகில் மூன்றாவது செவிலியர் அமைப்பு. இந்த செவிலியர் அமைப்பால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை.

    நோய்கள் பரவாமல் இருக்க தடுப்பூசிகள் மிக மிக அவசியம், அப்படி தடுப்பூசி போடச் சொல்லிட்ட மருத்துவர்களையும் செவிலியர்களையும் மக்கள் துரத்திய காலம் ஒன்று இருந்தது. ஆனால் அவர்களுக்கும் புரிய வைத்து தடுப்பூசி போட வைத்த பெருமை செவிலியர் சமூகத்திற்கு உண்டு.

    திராவிட இயக்கமும் அப்படித்தான் – சமூகத்தை பிடித்த நோய்களை தீர்ப்பதற்காக., பெரியார், அண்ணா,.கலைஞர், பகுத்தறிவு கருத்துக்களை ஊர் ஊராக சென்று சொன்னார்கள். ஆரம்பத்தில் அவர்களை தடுத்தார்கள், தாக்கினார்கள். ஆனால் அது எல்லாம் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றிய காரணத்தால் தான் இந்த சமூகம் முன்னேறி இருக்கின்றது

    கோபாலபுரத்தில் கலைஞர் அவர்களின் சொந்த வீடு இந்தியாவின் அரசியல் நிகழ்வுகளை தீர்மானம் செய்த இடம். அந்த வீட்டை தன்னுடைய காலத்திற்கு பிறகு, மருத்துவமனையாக்க வேண்டுமென்று எழுதிக் கொடுத்திருக்கிறார், அதேபோல அவர் வழியில் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் தமிழக சுகாதாரத்துறை மூலம் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தந்திருக்கின்றார்,

    இந்த திராவிட மாடல் அரசு என்றைக்கும் செவிலியர்களுக்கு பக்க பலமாக நிற்கும். 100 ஆண்டுகள் காணும் இந்த துறை இன்னும் பல நூறு ஆண்டுகள் மக்கள் சேவையாற்றி வெற்றி காண வேண்டும் ,

    மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா சுப்பிரமணியன்,பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் எழிலன்,தாயகம் கவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Post Views: 2
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோலீசார் மீது நடிகர் மன்சூர் அலிகான் புகார்..
    Next Article முன்னாள் எம்.பி.ஞானதிரவியம் வழக்கு – இன்ஸ்பெக்டர்களுக்கு சம்மன்
    Editor TN Talks

    Related Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    பரந்தூர் விமான நிலையத் திட்டம்..!! விஜய் அரசுக்கு சவால்..!! நடக்கப்போவது என்ன..??

    குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை நீட்டிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜக தலைவர் நிதின் நபினுடன் அண்ணாமலை முக்கிய மீட்டிங்..!! எதிர்பார்ப்பு உச்சம்..!!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.