அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை கண்காணிக்க கூடுதல் CCTV அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புதிய மனு அளித்துள்ளது.
தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 75,032 வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அதிமுக சார்பில் எம்பி இன்பதுரை அவசர மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், சில மாவட்டங்களில் CCTV எண்ணிக்கையை குறைக்கும் முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டு போடுதல் உள்ளிட்ட தவறுகளை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேவையான சிசிடிவிகள் பொருத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
