Close Menu
    What's Hot

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    தேமுதிகவுக்கு எத்தனை சீட்!. பிரேமலதா கொடுத்த அப்டேட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை 6 மாதத்தில் முடிக்கவும்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை கடுமையான உத்தரவு.
    தமிழ்நாடு

    அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை 6 மாதத்தில் முடிக்கவும்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை கடுமையான உத்தரவு.

    Editor TN TalksBy Editor TN TalksJune 4, 2025Updated:June 4, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரையை தலைமையிடமாக கொண்டு அப்சல் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது.
    இந்த நிறுவனத்தினரின் ஆசை வார்த்தையை நம்பி, நான் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் 100 கோடி வரை முதலீடு செய்திருந்தனர்.

    ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி நாங்கள் செலுத்திய முதலீட்டுத்தொகையை வட்டியுடன் திருப்பித்தரவில்லை. இதுகுறித்து புகார் அளித்ததால் 2017-ல் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் தொகையை திரும்ப பெற்றுத்தர ஓய்வு பெற்ற நீதிபதி சுதந்திரம் தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், அப்சல் நிறுவன மேலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது.

    அந்த குழு, நிதி நிறுவனத்தின் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. நிறுவனத்தினர் இதற்கு ஒத்துழைக்கவும் இல்லை. இதற்கிடையே அப்சல் நிறுவன நிர்வாகி செந்தில்வேல் இறந்துவிட்டார். நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அப்சல் நிதிநிறுவனம், அதன் கிளை நிறுவனங்களால் சுமார் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அந்த மோசடி செய்தவர்கள் தப்பிக்க போலீசார் உடந்தையாக உள்ளனர். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு உதவியாகவும் போலீசார் உள்ளனர். எனவே அப்சல் நிதிநிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என கோயமுத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2023 ஆண்டு தக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்துள்ள உத்தரவில், இந்த வழக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நீதிமன்றம் ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதியை தலைமையாக கொண்டு விசாரணையை முடிக்க உத்தரவிட்டுள்ளது ஆனால் குற்றவாளிகள் போதிய ஒத்துழைப்பு தரவில்லை.
    மேலும் வழக்கு விசாரணை கடந்த எழு ஆண்டுகளாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது பொருள் போல் உள்ளது. இனியும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறும் காரணங்களை ஏற்க முடியாது இந்த வழக்கை ஆறு மாதத்தில் விசாரணை செய்து முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கைகள் வேண்டும்.

    பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றம் 1997 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தின் மூலம் தங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர். மேலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள இதுவரை பொருளாதார குற்றப்பிரிவு வழக்கின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு விடப்பட்டிருந்தது அதன் அடிப்படையில் பார்க்கும்போது.

    தமிழகத்தில் இதுவரை நிதி நிறுவன மோசடி பிரிவின் கீழ் 1249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 6,90,166 நபர்கள் முதலீடு செய்துள்ளனர். இதற்காக இதுவரை 366 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    சுமார் 827 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சுமார் 50 கோடியே 71 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் 373 கோடி ரூபாய் வைப்புத்தொகை வைக்கப்பட்டுள்ளது. இதில் 264 கோடி ரூபாய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த புள்ளி விவரங்களை பார்க்கும்போது 39% சதவீத சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடி ஈடுபடுவது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது.
    இதில் பாதிக்கப்படுபவர்கள் அதிகமான நபர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொது மக்களே. எஎனவே அரசு இந்த விவகாரங்களை எளிதாக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்தால் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து சொத்துக்களை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என அறிவுறுத்திய நீதிபதி.

    பொருளாதார மோசடியில் சிக்கியவர்கள் எவ்வளவு பெரிய உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையை நம்பி தான் உள்ளனர். ஆனால் பல வழக்குகள் 2017 ஆம் ஆண்டு முதல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்த வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வது எப்பொழுது என தெரியவில்லை.எனவே அரசு பொருளாதார மோசடியில் பாதிக்கப்பட்டவர்களை கவனத்தில் கொண்டு இந்த வாகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாம்பழம் விலை வீழ்ச்சி – அரசே விலை நிர்ணயிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..
    Next Article வெற்றிமாறன் தயாரித்துள்ள மனுஷி படம்…. சென்சார் போர்டுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..
    Editor TN Talks

    Related Posts

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    February 19, 2026

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    February 19, 2026

    தேமுதிகவுக்கு எத்தனை சீட்!. பிரேமலதா கொடுத்த அப்டேட்!

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    தேமுதிகவுக்கு எத்தனை சீட்!. பிரேமலதா கொடுத்த அப்டேட்!

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    Trending Posts

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026

    நாடு முழுவதும் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது!

    February 19, 2026

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    February 19, 2026

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.