Close Menu
    What's Hot

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அகஸ்தியர், சொரிமுத்து அய்யனார் கோயில்.. உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது…
    தமிழ்நாடு

    அகஸ்தியர், சொரிமுத்து அய்யனார் கோயில்.. உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது…

    Editor TN TalksBy Editor TN TalksJune 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1836804 sorimuthu ayyanar temple
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்மிகு அகஸ்தியர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.

    அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு, வாகனங்கள் நிறுத்துவதற்கு வனத்துறை சார்பாக பணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதிக்க கோரி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், “திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்மிகு அகஸ்தியர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில்’ என்ற பெயரில் புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியமிக்க கோயில் உள்ளது இந்த பகுதி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.
    இங்கே அகஸ்தியர் கோவிலின் அருகே அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு பொதுமக்கள் பக்தர்கள் என பலரும் வந்து குளித்து செல்கின்றனர். மேலும் இந்த பகுதியில் நுழைவதற்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த நுழைவு கட்டணம் உள்ளூர் மக்களிடமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த அருவியில் குளிப்பதற்கு மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தமிழ்நாடு வனத்துறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக பணம் வசூலிக்கப்படுகிறது. அருவியில் குளிப்பதற்கு மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு பணம் வசூல் செய்வது பேரூராட்சி, நகராட்சி அல்லது பஞ்சாயத்து ஆகியோர் மட்டுமே செய்ய வேண்டும். ஆனால், வனத்துறை அலுவலர்கள் இணைந்து மூலம் பணம் வசூல் செய்வது ஏற்கத்தக்கதல்ல. மேலும் நுழைவு கட்டணம் என்பது உள்ளூர் பொதுமக்களிடமும் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அகஸ்தியர் கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கும் உள்ளூர் பொது மக்களுக்கும் நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கு தமிழ்நாடு வனத்துறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் டிரஸ்ட் சார்பாக பணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வனத்துறை தரப்பில் நுழைவு கட்டணம் வசூலிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், உள்ளூர் மக்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என உத்தரவிட்டனர்.

    Agastiyar temple Ayyanar temple Tamil Nadu free access for locals local people temple access religious place free entry Sorimuthu Ayyanar temple Tamil temple news temple donation issue temple entrance fee Tamil Nadu temple entry charges temple fee controversy temple fee protest temple policy Tamil Nadu temple rights for locals
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகர்நாடகாவில் தக் லைப் படம் தள்ளிவைப்பு
    Next Article 45 நிமிடங்களில் தேனி டூ மதுரை.. கல்லீரலோடு பறந்த ஆம்புலன்ஸ்…
    Editor TN Talks

    Related Posts

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    December 24, 2025

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    December 24, 2025

    பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுப்போம்!. விஜய் ட்வீட்!

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    Trending Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    December 24, 2025

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    December 24, 2025

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    December 24, 2025

    ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!

    December 24, 2025

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.