Close Menu
    What's Hot

    மார்ச்.15-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!.

    தேர்தல் எதிரொலி!. கொமதேவுக்கு 2 தொகுதிகள்!. திமுக கூட்டணியில் 38 இடங்கள் ஓவர்!.

    மும்பையில் மெகா டீல்!. வாடகைக்கு விடப்படும் ரத்தன் டாடா வீடு!. எவ்வளவு தொகை தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»”அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்”!. கட்சி பெயரை அறிவித்த சசிகலா!
    தமிழ்நாடு

    ”அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்”!. கட்சி பெயரை அறிவித்த சசிகலா!

    Editor web3By Editor web3March 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sasikala
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியலில் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, மீண்டும் நேரடி அரசியலில் இறங்கியுள்ளார். இதற்காக கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

    அதன்படி இன்று ‘அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்’ (அஇபுதமமுக) என்ற கட்சியில் சசிகலா தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். நீண்ட நாட்களாக அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அவர், தற்போது தனது ஆதரவாளர் மற்றும் தொண்டர் ஒருவர் தொடங்கியுள்ள கட்சியில் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

    கட்சியில் இணைந்த கையோடு, அக்கட்சிக்கான புதிய கொடியையும், ‘தென்னந்தோப்பு’ சின்னத்தையும் சசிகலா அறிமுகம் செய்து வைத்தார். “இது தொண்டர்களுக்கான கட்சி, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள் நோக்கம்” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல்களுக்கு மத்தியில், சசிகலாவின் இந்த அதிரடி முடிவு அவரது ஆதரவாளர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும்  அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் நாங்கள் தனி மரமாக வரவில்லை தோப்பாக தான் வந்திருக்கிறோம் கூட்டணி வைத்து தேர்தல் சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக அரசியலில் தற்போது திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் எனப் பலமுனைப் போட்டி நிலவி வரும் சூழலில், சசிகலாவின் இந்த புதிய அரசியல் பிரவேசம் மற்றும் சின்னம் அறிமுகம் தேர்தல் களத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் விமர்சகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசஞ்சு சாம்சன் எங்கே?. எடிட் செய்தாரா சுப்மன் கில்?. உலகக்கோப்பை புகைப்படத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு!
    Next Article விஜய் உடனான வைரல் விவகாரம்!. செய்தியாளர்களிடம் முகம் கொடுக்காமல் எஸ்கேப்பான த்ரிஷா!. 
    Editor web3
    • Website

    Related Posts

    மார்ச்.15-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!.

    March 13, 2026

    தேர்தல் எதிரொலி!. கொமதேவுக்கு 2 தொகுதிகள்!. திமுக கூட்டணியில் 38 இடங்கள் ஓவர்!.

    March 13, 2026

    கோமாவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி!. ஒரு கால் துண்டிக்கப்பட்டதா?.

    March 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மார்ச்.15-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!.

    தேர்தல் எதிரொலி!. கொமதேவுக்கு 2 தொகுதிகள்!. திமுக கூட்டணியில் 38 இடங்கள் ஓவர்!.

    மும்பையில் மெகா டீல்!. வாடகைக்கு விடப்படும் ரத்தன் டாடா வீடு!. எவ்வளவு தொகை தெரியுமா?

    கோமாவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி!. ஒரு கால் துண்டிக்கப்பட்டதா?.

    விஜய் உடனான வைரல் விவகாரம்!. செய்தியாளர்களிடம் முகம் கொடுக்காமல் எஸ்கேப்பான த்ரிஷா!. 

    Trending Posts

    அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!. ‘பவர்ஃபுல்’ பொறுப்பு வழங்க இபிஎஸ் திட்டம்!.

    March 13, 2026

    மும்பையில் மெகா டீல்!. வாடகைக்கு விடப்படும் ரத்தன் டாடா வீடு!. எவ்வளவு தொகை தெரியுமா?

    March 13, 2026

    பெரும் துயரம்!. நிலச்சரிவில் சிக்கி 107 பேர் பலி!. 57 உடல்கள் மீட்பு!

    March 13, 2026

    திமுகவில் வரலாற்று மாற்றம்!. மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நியமனம்!.

    March 13, 2026

    போர் பதற்றம்!. 90 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு!. உலகப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்?

    March 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.