பா.ம.க.வில் அந்த கட்சியின் நிறுவன தலைவரான டாக்டர் ராமதசுக்கும், அவரது மகனான அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வருகிறது.இருவரும் தனித்தனியாக பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறார்கள். டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்தபடியும், அன்புமணி சென்னையில் இருந்தபடியும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இப்படி இரு பிரிவாக பா.ம.க. செயல்பட்டு வரும் நிலையில், தற்போது உள்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

டாக்டர் ராமதாசின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் ஜி.கே.மணி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். எனது மீது அன்புமணி கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும், ஜி.கே.மணி கூறி இருந்தார். இந்த நிலையில் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி ஜி.கே.மணியை பா.ம.க.வில் இருந்து நீக்குவதாக அன்புமணி நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, தேர்தல் ஆணையமே அன்புமணி பாமக தலைவர் என்று சொல்வதற்கு அதிகாரமில்லை என்று கூறியுள்ள நிலையில், அவர் கட்சியை விட்டு நீக்க உத்தரவிடுவது செல்லாது என்றும் என்னை நீக்க ராமதாசுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version