தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் கண்காணிப்பு நடவடிக்கைகளை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் அத்தொகுதியின் வேட்பாளருமான செல்வப்பெருந்தகை நேரில் சென்று ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு முடிந்து இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராக்கள் முறையாகச் செயல்படுகிறதா என்பதையும், திரையில் காட்சிகள் துல்லியமாகத் தெரிகிறதா என்பதையும் அவர் அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.

பாதுகாப்பு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்குச் சென்ற அவர், பதிவான காட்சிகளை நீண்ட நேரம் ஆய்வு செய்தார். தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பில் எந்தவிதத் தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அவர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் நிலவரம் குறித்துக் கேட்டறிந்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version