பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தன் மனைவி பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக புள்ளி விவரத்துடன் பாஜகவை சேர்ந்த கல்யாண் ராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளாய், ஆனாலும் உன்னுடைய அபிடவிட்டில் மனைவியின் தொழில் முதலீடுகளை காட்டாமல் மறைத்துள்ளாய். இது சட்டப்படி பெரிய குற்றம் என்பதை நீ மறந்து விட்டாயா? ஒருவேளை நீ வெற்றி பெற்றிருந்தாலும்,இதே காரணத்தை வைத்து உன்னை தகுதி நீக்கம் செய்ய முடியும்.ஆனால் நீ போட்டியிட்டதே திமுகவை வெற்றி பெறச் செய்யத்தானே.
கடந்த ஐந்து ஆண்டுகளில் உன் மனைவி பெயரில் நடந்துள்ள முதலீடுகள், “ Burrow Properties Pvt Ltd நிறுவனத்தில் ரூ.1.23 கோடியும், Lands & Lands Ventures India Pvt Ltd நிறுவனத்திலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இது கோவையில் குட்டி G-Square போல வளர்ந்து வருகிறது. மேலும் தகவலுக்கு சூலூர், செலக்கரச்சல் 6 ஏக்கரில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் நிலம், போளூவம்பட்டியில் 2.25 கோடியில் 12.11 ஏக்கர் நிலம் உள்ளது.
உன் மனைவியின் கடந்த 7 ஆண்டு கால மொத்த வருமானம் ரூ.97.63 லட்சம் மட்டுமே, இதை வைத்து ரூ.4.2 கோடி முதலீடுகள் செய்தது எப்படி தம்பி? இந்த நிறுவனங்களில் பெரிய பங்குதாரர் உனது மனைவி தான் ஆனால் கம்பெனியின் டைரக்டராக ஆகாமல் ஆச்சரியத்தை அளிக்கிறது. பொதுவாக ஒரு நிறுவனத்தில் உள்ள பெரிய பங்குதாரர்கள் தான் அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அல்லது குறைந்த பட்சம் இயக்குனராக இருப்பார்கள் அவற்றை மீறி இதில் மறைத்துள்ளதன் காரணம் கூட சந்தேகத்தை கிளப்புகிறது.
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை போல, கடந்த நான்கு வருடங்களில் நீ குவித்து வைத்திருக்கும் சொத்துப்பட்டியல் மலைக்க வைக்கிறது!!!
அரசியலை வைத்து ஆயிரம் பேர் பிழைக்கிறார்கள். அவர்களை நான் கேள்வி கேட்டதில்லை. ஏனென்றால் அவர்களில் யாரும் “நான் பரிசுத்தமானவன் ஒற்றை ரூபாய் லஞ்சம் பெற்று இருப்பேனா” என்று வசனம் பேசியதில்லை. இந்த கேள்விகளை முன்வைக்க நீயே காரணம் ஆகி விட்டாய் தம்பி. இலங்கையில் இருந்து மாறிச் செல்லும் நாட்டில் செய்ய உள்ள காரியம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார். இதனால் ஊழல்வாதி இல்லை என பேசி வரும் அண்ணாமலை, தன் மனைவி மீது குவிந்துள்ள சொத்துக்களுக்கு விளக்கம் அளிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.