2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் நேற்று தமிழகம் வருகை தந்தார். சென்னை தனியார் விடுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.

இந்த ஆலோசனையில் அதிமுக 170 தொகுதிகளில் களம் காணும் என்றும்,  பாஜகவுக்கு 25 தொகுதிகளும் பாமகவுக்கு 21 தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு 6 தொகுதி மற்றும் 1 ராஜ்யசபை, அமமுகவுக்கு 6 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 3 தொகுதிகளும் புதிய தமிழகம், ஜான்பாண்டியன், புதிய நீதி கட்சி ஏ.சி. சண்முகத்துக்கு தலா 1 தொகுதி என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பட்டியலை பியூஸ் கோயிலிடம் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியதாக கூறப்படுகிறது.

பட்டியலை பார்த்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இது தொடர்பாக மூத்த நிர்வாகிகள் மற்றும் அகில இந்திய தலைமையுடன் பேசிவிட்டு கூறுவதாக தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பாஜகவின் மைய குழு கூட்டத்தில்  விஜய் குறித்து விவாதித்ததாக தகவல் பரவியது. அப்போது அதிமுக பாஜக கூட்டணிக்குள் விஜய் இணைய வாய்ப்பில்லை என்று மற்ற நிர்வாகிகள் தெரிவித்த நிலையில் அவருடைய வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாதிப்பு இல்லாத வகையில் பணியாற்ற வேண்டுமென ஆலோசித்ததாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் திமுகவுக்கான சிறுபான்மை வாக்குகளை சரிசமமாக பிரிப்பதில் விஜய் முக்கிய பங்கு வகிப்பார் எனவும், விஜய பாஜக கூட்டணிக்கு வர வேண்டிய தேவை இல்லை என்றாலும் கட்சி பொதுக்கூட்டங்களிலோ சமூக வலைதளங்களிலோ அவருக்கு எதிராக கருத்துகள் தெரிவிப்பதை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் என்று பியூஸ் கோயல் கூறியதாக பேசப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version