முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

சமீபகாலமாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் நிகழ்வு தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சுதந்திர தினத்தன்று காரில் ஏற்றும் போது வெடிகுண்டு வெடிக்கும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புக் கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார்,

காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர், தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட விரக்தியில் மது போதையில் மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version