முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அருவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு இருப்பதாக இன்று அதிகாலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் கூறியுள்ளார்.

உடனடியாக போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபரின் செல்ஃபோன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version