நள்ளிரவில் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாலையிலேயே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டே உள்ளன. நேற்று நயன்தாரா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் அது புரளி என கூறப்பட்டது.இந்த நிலையில் நள்ளிரவில் சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருபப்தாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் அழைப்பு வந்துள்ளது.
அதை தொடர்ந்து அதிகாலை விஜய் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு
நிபுணர்கள் விஜய் வீட்டை சோதனையிட முயன்றனர். அப்போது உறங்கி கொண்டிருக்கிறார் என்றும், அவர் எழுந்திருக்க 7 மணி ஆகும் என வீட்டின் காவலாளி கூறியதால் போலீசார் விஜய் வீட்டின் முன்பு காத்திருந்தனர்.
பின்னர் 7.05 மணிக்கு விஜய் வீடிற்குள் நுழைந்த வெடிகுண்டு நிபுரணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இதேபோல் கடந்த 28ம் தேதியும் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது