தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்: மையிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் (தெற்கு), கோவை (வடக்கு), கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை (தெற்கு), சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர்(தனி), ராதாபுரம், நாகர் கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை(தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணியின் மற்றொரு முக்கிய அங்கமான பாமக-விற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவின் கோட்டையாகக் கருதப்படும் தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம் மற்றும் செஞ்சி ஆகிய தொகுதிகளுடன், சென்னையின் புறநகர் பகுதியான அம்பத்தூர் மற்றும் பெரம்பூர் தொகுதிகளும் பாமகவிற்கு வழங்கப்பட்டுள்ளன.

பாமக போட்டியிடும் 18 தொகுதிகள்:
1.சேலம் மேற்கு
2.தருமபுரி
3.பென்னாகரம்
4.விக்கிரவாணி
5.சோளிங்கர்
6.மயிலாடுதுறை
7.திருப்போரூர்
8.உத்திரமேரூர்
9.ஜெயங்கொண்டம்
10.போளூர்
11.செஞ்சி
12.விருத்தாசலம்
13.ரிஷிவந்தியம்
14.காட்டுமன்னார்கோயில்
15.கீழ்வேலூர் (தனி)
16.பெரம்பூர்
17.சேலம் வடக்கு
18.அம்பத்தூர்.

அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்:

1.பெரியகுளம்
2.மன்னார்குடி
3.திருவையாறு
4.காரைக்குடி
5.திருப்பத்தூர்
6.நாங்குநேரி
7.ஒட்டப்பிடாரம் (தனி)
8.திருச்சி மேற்கு
9.சைதாப்பேட்டை
10.பூந்தமல்லி (தனி)
11.மடத்துக்குளம்

தமாகா போட்டியிடும் 5 தொகுதிகள்:
1.ஒட்டன்சத்திரம்
2.ஈரோடு மேற்கு
3.ராணிப்பேட்டை
4.கிள்ளியூர்
5.கும்பகோணம்

ஐஜேகே போட்டியிடும் 2 தொகுதிகள்:
1.பல்லாவரம்
2.குன்னம்

தமமுக (1 தொகுதி)

1. ராஜபாளையம்

புரட்சி பாரதம் (1 தொகுதி)

1. கேவி குப்பம்

அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கான இந்தத் தொகுதிப் பங்கீடு தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணியின் பலத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தொகுதிப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version