Close Menu
    What's Hot

    விஜய் அடுத்த மூவ்!. வரும் 23ஆம் தேதி வேலூரில் பரப்புரை!. ஏற்பாடுகள் தீவிரம்!.

    ”இதுதான் வளர்ச்சி!. தமிழ்நாடு தான் இந்தியாவுக்கான மாடல்”!. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

    இடைக்கால வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாணவர்களிடையே புழங்கும் கஞ்சா!. திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்!. நயினார் நாகேந்திரன்!
    தமிழ்நாடு

    மாணவர்களிடையே புழங்கும் கஞ்சா!. திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்!. நயினார் நாகேந்திரன்!

    Editor web3By Editor web3February 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nayinar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பள்ளிகளில் போதைப் பொருட்கள் சரளமாகப் புழங்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

    பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”சென்னை வியாசர்பாடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு கஞ்சா எடுத்துச் சென்ற சம்பவம் இந்த போதை மாடல் அரசின் அவல ஆட்சிக்கான உதாரணம். பள்ளி மாணவர்கள் கைகளில் கஞ்சாவும், பைகளில் பட்டாக் கத்தியும் புழங்கும் நிலையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று விளம்பர விழா எடுக்க திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

    “அப்பா” என்ற அடைமொழிக்கு ஆசைப்படும்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தனது கண்முன்னே பள்ளிக் குழந்தைகள் இப்படி போதையில் மூழ்கித் தடம் புரள்வதைக் கண்டும் காணாமல் கடந்து போவது அலட்சியத்தின் உச்சம்.

    “அரசுப்பள்ளி எனது கோட்டை” என்று முழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ்  அவர்கள், அரசுப்பள்ளிகளில் இத்தனை அக்கிரமங்கள் நடக்கையில் எங்கே போனார் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

    பதின்ம வயது பள்ளி மாணவனுக்கு கூட கஞ்சா விற்கப்படுகிறது என்றால் திமுகவின் ஏவல்துறை எந்தளவிற்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும்? தங்களின் அவல ஆட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீதும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடுபவர்கள் மீதும் பொய் வழக்கு போடுவதில் மட்டுமே திமுக அரசு அதீத கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், நமது சமூகக் கட்டமைப்பை அரித்துக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களை எப்படி ஒழிக்க முடியும்? இப்படிப்பட்ட ஒரு சுயநல ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடும்”  என்று தெரிவித்துள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநெல்லையில் மீண்டும் பயங்கரம்!. 18 வயது இளம்பெண் ஆணவக்கொலை?. 
    Next Article நான் யாரையும் எதிரிகளாக பார்ப்பதில்லை; எல்லோரும் நண்பர்கள்தான்!. விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி!
    Editor web3
    • Website

    Related Posts

    விஜய் அடுத்த மூவ்!. வரும் 23ஆம் தேதி வேலூரில் பரப்புரை!. ஏற்பாடுகள் தீவிரம்!.

    February 17, 2026

    ”இதுதான் வளர்ச்சி!. தமிழ்நாடு தான் இந்தியாவுக்கான மாடல்”!. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

    February 17, 2026

    இடைக்கால வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் அடுத்த மூவ்!. வரும் 23ஆம் தேதி வேலூரில் பரப்புரை!. ஏற்பாடுகள் தீவிரம்!.

    ”இதுதான் வளர்ச்சி!. தமிழ்நாடு தான் இந்தியாவுக்கான மாடல்”!. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

    இடைக்கால வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

    சொத்தை பழம் போல் இன்றைய பட்ஜெட்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    விஜய் அடுத்த மூவ்!. வரும் 23ஆம் தேதி வேலூரில் பரப்புரை!. ஏற்பாடுகள் தீவிரம்!.

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட்டை 2 மணிநேரம் 22 நிமிடம் வாசித்த தங்கம் தென்னரசு!.

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.