திருநின்றவூர் ரயில் பணிமனையில் நடைபெறும் பராமரிப்புப் பணி காரணமாக, சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
இதுதொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கடற்கரை மற்றும் சென்ட்ரலிலிருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, திருநின்றவூர் வரை இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் காலை 7 மணி முதல் மதியம் மூன்று நாற்பது மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எண்ணூரில் இருந்து சென்னை சென்ட்ரல், திருவள்ளூர், அதேபோல் ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரல், கடற்கரை இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
