சென்னை பறக்கும் ரயில் – மெட்ரோ ரயில் இணைக்க கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது.
சென்னை பறக்கும் ரயில் சேவை சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையில் செயல்பட்டு வருகிறது. மேலும், வேளச்சேரியையும் – பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயிலுடன் இணைப்பதற்கான பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றது.
இதற்கிடையில், பறக்கும் ரயில் சேவையை மாநில அரசிடம் ஒப்படைக்குமாறு நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்து இருந்தார்.
இந்நிலையில், சென்னை பறக்கும் ரயில் – மெட்ரோ ரயில் இணைப்பு பணிகளை மேற்கொள்ள கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது.
இதற்கு அடுத்த கட்டமாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பணிகள் அடுத்த மூன்று மாதத்திற்குள் முடிக்க சென்னை பெருநகர் ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டுள்ளது.
இதன்பிறகு , இந்த ஆண்டு இறுதிக்குள் பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயிலுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.