GST அலுவலகம் மற்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள GST அலுவலகத்திற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில், ஜிஎஸ்டி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. இதேபோல, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.

இதனால் GST அலுவலகம் மற்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகிய அலுவலகங்களில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் தீவிர சோதனை கொண்டு வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் மற்றும் பகவந்த் மான் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதன் பின்னணியில் இருப்பபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version