Close Menu
    What's Hot

    ஐபிஎல் திருவிழா!. கேப்டனான இஷான் கிஷன்!. அபிஷேக் சர்மாவுக்கும் புதிய பொறுப்பு!.

    கம்பீர் அதிரடி!. ‘டீப்ஃபேக்’ வீடியோக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

    “கோடைக்காலப் பேரழிவைத் தற்போதே தடுப்போம்”!. செல்வப்பெருந்தகை பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர்… ரூ.15,516கோடி முதலீடுகள்… 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…
    தமிழ்நாடு

    வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர்… ரூ.15,516கோடி முதலீடுகள்… 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 6, 2025Updated:September 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ரூ.15,516கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதனடிப்படையில், தமிழ்நாட்டில் 15,320 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஜெர்மனியை சேர்ந்த 26 நிறுவனங்கள் ரூ.7,000 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

    ஜெர்மனியை தொடர்ந்து இங்கிலாந்து சென்ற முதலமைச்சர், லண்டன் நகரில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர் அலுவலர்களுடனான உயர் மட்ட கூட்டங்களுக்கு தலைமை தாங்கினார். அதில், பாதுகாப்பு மற்றும் விண்வெளி, கப்பல் கட்டும் நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.

    தனது சுற்றுப்பயணம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”லண்டனில் இருந்து மகிழ்ச்சியான செய்தி. இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட இந்துஜா குழுமம், தமிழகத்தின் மின்சார வாகன சூழலுக்கான மின்கலம் சேமிப்பு சாதனங்களுக்காக ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

    ஆஸ்டிராஜெனீகா நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் இதற்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றால், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான தமிழக எழுச்சி பயணத்தின் வழியாக, ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன. இதனால் நம்முடைய இளைஞர்களுக்கு 17,613 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    இவை வெறும் எண்கள் அல்ல. அவை வாய்ப்புகள், வருங்காலங்கள் மற்றும் கனவுகள். இது, செயலில் திராவிட மாடலின் மனவுறுதியாகும் என பதிவிட்டு உள்ளார்.

    அவருடைய ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கான பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் ஜெர்மனியில் மேற்கொண்ட பயணத்தில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், இங்கிலாந்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஜெர்மனியில் ரூ.7,020 கோடியும், இங்கிலாந்தில் ரூ.8,496 கோடியும் என மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன” என தெரிவித்து உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகெடு விதித்த செங்கோட்டையன்… இபிஎஸ் அவசர ஆலோசனை…
    Next Article புரோ கபடி லீக் : பெங்களூருவை பந்தாடிய யு மும்பா…
    Editor TN Talks

    Related Posts

    “கோடைக்காலப் பேரழிவைத் தற்போதே தடுப்போம்”!. செல்வப்பெருந்தகை பதிவு!

    March 19, 2026

    விளாத்திகுளம் மாணவி கொலை!. குற்றவாளி பிடிபட்ட பிறகும் ஓயாத சர்ச்சை!. அண்ணாமலை எழுப்பும் சந்தேகங்கள்!

    March 19, 2026

    கொளுத்தும் வெயில்!. ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம்!. தடுப்பது எப்படி?

    March 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐபிஎல் திருவிழா!. கேப்டனான இஷான் கிஷன்!. அபிஷேக் சர்மாவுக்கும் புதிய பொறுப்பு!.

    கம்பீர் அதிரடி!. ‘டீப்ஃபேக்’ வீடியோக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

    “கோடைக்காலப் பேரழிவைத் தற்போதே தடுப்போம்”!. செல்வப்பெருந்தகை பதிவு!

    விளாத்திகுளம் மாணவி கொலை!. குற்றவாளி பிடிபட்ட பிறகும் ஓயாத சர்ச்சை!. அண்ணாமலை எழுப்பும் சந்தேகங்கள்!

    கொளுத்தும் வெயில்!. ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம்!. தடுப்பது எப்படி?

    Trending Posts

    “கோடைக்காலப் பேரழிவைத் தற்போதே தடுப்போம்”!. செல்வப்பெருந்தகை பதிவு!

    March 19, 2026

    தமிழ்நாட்டில் புதிதாக 5 தலைநகரங்கள்!. நாதக தேர்தல் வாக்குறுதி!. சீமான் அதிரடி!

    March 19, 2026

    நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிரடி குறைவு!

    March 19, 2026

    ஐபிஎல் திருவிழா!. கேப்டனான இஷான் கிஷன்!. அபிஷேக் சர்மாவுக்கும் புதிய பொறுப்பு!.

    March 19, 2026

    கம்பீர் அதிரடி!. ‘டீப்ஃபேக்’ வீடியோக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

    March 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.