Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சித்திரை முழு நிலவு மாநாடு.. தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!
    தமிழ்நாடு

    சித்திரை முழு நிலவு மாநாடு.. தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 10, 2025Updated:May 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ramadoss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாமக சார்பில் நாளை நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் அனைவரும், காவல் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி முழு கட்டுப்பாடுடன், இடையூறு இல்லாமல் அமைதியான முறையில் வந்து செல்ல வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், தென் மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை செல்ல அனுமதியில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். மாறாக, என்எச் 45 என அழைக்கப்படும் சென்னை – திருச்சி சாலை மார்க்கமாகவே மாநாட்டுக்கு செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அன்றைய தினம் மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் பயணிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை பாமக தலைவலர் அன்புமணி இன்று (மே 9) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநாட்டுக்கு அனைவரையும் வரவேற்று வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    உங்களை காண ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் உங்களின் அன்புமணி.! pic.twitter.com/IIjNZPYc78

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 9, 2025

    அதில், “சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கு அனைவரையும் வரவேற்கிறேன். மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் முழு கட்டுப்பாடுடன், போலீஸாரின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றி அமைதியான முறையில் வாகனத்தில் வரவேண்டும். அதேபோல், மாநாட்டை நிறைவு செய்து மீண்டும் அமைதியான முறையில் ஊர் திரும்ப வேண்டும். நீங்கள் அனைவரும் ஊர் திரும்பும் வரையில் எனக்கு தூக்கம் இருக்காது.” எனக் கூறியுள்ளார்.

    மேலும், “இந்த மாநாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மாநில அரசை வலியுறுத்துவோம். அனைவருக்கும் உரிய இட ஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவற்றுக்காகத்தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமில்லாமல், ஆந்திரா, கர்நாடக உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தொண்டர்கள் வருகின்றனர்,” என்று அந்த வீடியோவில் அன்புமணி கூறியுள்ளார்.

    Anbumani Ramadoss Conference Mamallapuram Party members PMK PMK Maanaadu politics request Vanniyar Sangam அன்புமணி ராமதாஸ் சித்திரை முழு நிலவு மாநாடு தொண்டர்கள் பாமக பாமக மாநாடு மாநாடு மாமல்லபுரம் வேண்டுகோள்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொய் புளுகும் பாகிஸ்தான்! பொளந்து கட்டும் இந்தியா!
    Next Article இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. முப்படை அதிகாரிகள் விளக்கம்!
    Editor TN Talks

    Related Posts

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் உயிரிழப்பு!. 6 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!

    February 15, 2026

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.