Close Menu
    What's Hot

    பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு!.அமைச்சர் தங்கம் தென்னரசு!

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக  ரூ.1,471 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    எகிறும் எதிர்பார்ப்பு!. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவையில் ரூ.208.50 கோடியில் கட்டப்பட்ட செம்மொழிப் பூங்கா – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
    தமிழ்நாடு

    கோவையில் ரூ.208.50 கோடியில் கட்டப்பட்ட செம்மொழிப் பூங்கா – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cmmm
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் ரூ.208.50 கோடி மதிப்பிலான செம்மொழி பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ.25) திறந்து வைத்தார்.

    கோவையில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். தொடர்ந்து கோவை மத்திய சிறை வளாகத்தை இடம் மாற்றிவிட்டு அங்கு 165 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து முதல் கட்டமாக தற்போதைய தமிழக அரசின் சார்பில் கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 208.50 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து கடந்த 18.12.2023 அன்று கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கும் திட்ட பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அதன் பின்னர் மாநகராட்சியின் சார்பில் செம்மொழி பூங்கா அமைக்கும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இரவு பகலாக தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் இறுதியில் செம்மொழி பூங்கா பணி தற்போது முடிவடைந்தது.

    இதையடுத்து செம்மொழி பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (நவ.25) நடைபெற்றது. இதற்காக செம்மொழி பூங்கா வளாகத்தின் ஒரு பகுதியில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

    மதியம் 12 மணிக்கு விழா நடைபெறும் இடத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின், செம்மொழி பூங்காவை பொதுமக்கள் பயன்பட்டதாக திறந்து வைத்தார். இதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கல்வெட்டை திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து பூங்கா வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் மாணவர்கள் , தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

    செம்மொழிப் பூங்கா சிறப்புகள்: 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த செம்மொழி பூங்காவில், செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர் தோட்டம், மணமகள் தோட்டம், பாலைவனத் தோட்டம், மலர் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திரத்தோட்டம், ரோஜா தோட்டம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம் உள்ளிட்ட மர வகைகள் வைக்கப்பட்டுள்ளன. செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டுள்ளதோடு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும், இப்பூங்கா வளாகத்தில் கடை ஏழு வள்ளல்களின் கல் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. செம்மொழி பூங்கா வளாகத்தில் பார்வையாளர்கள் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வறை, உணவகம், சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவாயில் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பூங்கா வளாகத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு எதுவாக அங்காடியும் நிறுவப்பட்டுள்ளது. மேலும், இந்த பூங்காவனத்தில் உலக தரத்தில் உடற்பயிற்சி கூடம், 4000 சதுரடி பரப்பளவில் உள்வண மாதிரி காட்சி அமைப்பு, குழந்தைகள் விளையாடுவதற்காக 14,000 சதுர அடி பரப்பளவில் விளையாட்டு திடல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் , செம்மொழி பூங்கா வளாகத்தில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதோடு, அதில் க்யூ ஆர்க்கோடு மற்றும் பார் கோடு போன்றவையும் நிறுவப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே என்.நேரு, கமுத்துசாமி, மேயர் கா.ரங்கநாயகி, நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த முதல்வருக்கு கட்சியினர் மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉங்ககிட்ட புளித்த மோர் இருக்கா? அப்போ சட்டுனு மைசூர் போண்டா செய்து பாருங்க! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு பெஸ்ட்!
    Next Article ராசிபுரம் யாருக்கு ‘ராசி’புரம்? – இரண்டு கூட்டணிகளிலும் இப்போதே இழுபறி
    Editor TN Talks

    Related Posts

    பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு!.அமைச்சர் தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக  ரூ.1,471 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    February 17, 2026

    எகிறும் எதிர்பார்ப்பு!. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!. 

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு!.அமைச்சர் தங்கம் தென்னரசு!

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக  ரூ.1,471 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    எகிறும் எதிர்பார்ப்பு!. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!. 

    மாபெரும் காது குத்தும் விழா’!. பட்ஜெட் குறித்து அதிமுக விமர்சனம்!

    மிரட்டும் சிவகார்த்திகேயன்!. 26-வது திரைப்படம் “சேயோன்”!. வந்தது புதிய அறிவிப்பு!

    Trending Posts

    மிரட்டும் சிவகார்த்திகேயன்!. 26-வது திரைப்படம் “சேயோன்”!. வந்தது புதிய அறிவிப்பு!

    February 17, 2026

    பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு!.அமைச்சர் தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக  ரூ.1,471 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!.

    February 17, 2026

    எகிறும் எதிர்பார்ப்பு!. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!. 

    February 17, 2026

    மாபெரும் காது குத்தும் விழா’!. பட்ஜெட் குறித்து அதிமுக விமர்சனம்!

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.