ஒசூருக்கு முதலமைச்சர் வருகை தருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் ஒசூர் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வரவேற்கின்றனர். இதற்கான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள. பின்னர் ஒசூரின் தளி சாலை பகுதியில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் அங்கிருந்து மதியம் 1.20 மணிக்கு எல்காட் தொழில் நுட்ப பூங்காவிற்கு செல்கிறார். அங்கு அசெண்ட் சர்கியூட் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் மாலை 4.30 மணிக்கு சூளகிரி பேருந்து நிலையத்தில் ரோடு ஷோ நிகழ்வில் பங்கேற்கிறார்.

இதனை தொடர்ந்து நாளை கிருஷ்ணகிரி ஆடவர் கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருக்கும் சிறப்பு கண்காட்சி அரங்குகளை பார்வையிட உள்ளா.ர் பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதையெல்லாம் முடித்து கொள்ளும் முதலமைச்சர் மீண்டும் சென்னை திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் வருகையை ஒட்டி கிருஷ்ணகிரியில் 2000 போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version