கோயம்புத்தூர் பாப்பநாயக்கன் பாளையம் சாலையில் உள்ள மகாலட்சுமி புத்தகக் கடையில் பணியாற்றும் இளைஞரிடம், பத்திரிகையாளர் என தன்னை அறிமுகப்படுத்தி, மதுபோதையில் இருந்து பிரபு என்ற நபர் ரூ.5,000 தொகை பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கோவை, பி.என் பாளையத்தை சேர்ந்த ப்ரீவின் (25), இவர் மகாலட்சுமி புத்தகக் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று
மதுபோதையில் வந்த பிரபு (48), என்பவர், நான் பத்திரிகையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, 5000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணத்தைக் கொடுக்க மறுத்ததால், அவதூறான வார்த்தைகளில் பேசியும் , கடையில் விற்கப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டவை என்று கூறி, பத்திரிகையில் எழுதுவதாகவும் மிரட்டி உள்ளார்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில், Race Course காவல் துறையினர் பிரபுவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.