கோவையில் நடைபெறும் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி : பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு !!!”

மக்களால் மட்டுமல்ல, மோடி ஐயா, கலைஞர் ஐயா, ஸ்டாலின் ஐயா அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அன்பு கொடுக்கக் கூடிய மனிதர் இளையராஜா – அண்ணாமலை புகழாரம்…

கோவைக்கு இசை நிகழ்ச்சிக்காக வந்து உள்ள இசைஞானி இளையராஜாவினை பா.ஜ.க வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர் தங்கி இருந்த நட்சத்திர விடுதிக்கு சென்று சந்தித்து உரையாடினார். பின்னர் கோவையில் உள்ள கோவைப்புதூர் பகுதியில் அவர் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு சென்ற அவர், இளையராஜாவை பற்றி புகழாரம் சூட்டினார்.

அப்போது பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது :-

இசைஞானி மேஸ்ட்ரோ என்னை பொறுத்த வரை இசை கடவுள் ஐயா இளையராஜா, அவர்களோடு இருந்து கொண்டு இருக்கிறோம், அவரைப் பார்ப்பதற்கு நாம் எல்லோரும், எல்லாத்தையும் மறந்து மனிதர்களாக, இசை பிரியர்களாக இருந்து கொண்டு இருக்கிறோம், அவர் போட்டு இருக்கின்ற இசையை முதலில் இருந்து கேட்டோம், ஆனால் 17 ஆண்டுகள் வேண்டுமென்றும், 49 ஆண்டுகள் இசை துறையில், 1,500 படங்கள், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் நமது சந்தோசமான நேரத்தில், துக்கமான நேரத்தில், தூக்கத்தில் எல்லா நேரங்களிலும் நம்மோடு இருக்கக் கூடிய இசைஞானி ஐயாவை கோவை மாநகருக்கு எல்லோரும் சார்பாக வரவேற்பதாக கூறியவர், அதை அனைத்தையும் தாண்டி தனி பெருமை, தமிழகத்தின் உடைய அடையாளமாக, இந்தியாவினுடைய பெருமையாக, முதல்
ஆசியாவைச் சார்ந்த ஒரு மனிதர் லண்டன், வெஸ்டர்ன் கிளாசிக்கல் சிம்பனி இசையில், மீட் லோஃப் இவர்களெல்லாம் போட்ட இசைக்கு மேலே வேலன்ச சிம்பல் இசையை கொடுத்து விட்டு, நம்முடைய மாநகரத்திற்கு வந்து உள்ளார்கள் என்றவர், இதை எல்லோரும் நாம் கொண்டாட வேண்டும், பாராட்ட வேண்டும் என்றும், காரணம் சிம்பொனியின் கிராமர், அர்த்தமேட்டிக் எல்லாமே வெஸ்டர்ன் மக்கள் செய்ததாகவும், அதை எல்லாம் உடைத்து ரூல்ஸ் ஆப் இளையராஜா என்பதை லண்டனுக்கு கொண்டு சென்றதாகவும், அப்படிப்பட்ட அவரை மகிழ்வாக வரவேற்பதாகவும் வரவேற்றார்.

தொடர்ந்து எங்களை மகிழ்விக்க வேண்டும் என்றும், 50 – வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாகவும், எல்லா விருதுகளும் அவரை தேடி வருவதாகவும், எல்லா மனிதர்களும் அவரிடம் வந்து விட்டதாக கூறினார்.

மேலும் அண்ணாமலை அவர், வரும்பொழுது அரசியல் கட்சி தலைவர்கள், வேறு, வேறு கட்சியில் இருக்கின்றவர்கள், மேலும் தான் சார்ந்த மோடி ஐயாவாக இருக்கட்டும், கலைஞர் ஐயாவாக இருக்கட்டும், ஸ்டாலின் ஐயாவாக இருக்கட்டும், எல்லா கட்சித் தலைவர்களும் அன்பு கொடுக்கக் கூடிய மனிதர் நீங்கள் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்று புகழாரம் சூட்டினார்

தொடர்ந்து உங்கள் இசை மழையில் எங்களுக்கு அந்த ஆனந்தத்தை எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றும் வாழ்த்தி சென்றார் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை …

Share.
Leave A Reply

Exit mobile version