Close Menu
    What's Hot

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை
    தமிழ்நாடு

    கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025Updated:November 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    police
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், நள்ளிரவில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரை பிடித்தனர்.

    மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாண்டு படித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவியும், அவரது நண்பர் ஆட்டோமொபைல்ஸ் கடை நடத்தி வரும் 25 வயதான இளைஞரும், பீளமேடு விமான நிலையம் பின்புறம் பிருந்தாவன் நகரில் உள்ள காலி இடத்துக்குச் சென்று காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர், இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு மாணவியை அருகிலுள்ள புதருக்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பினர்.

    மயக்கம் தெளிந்து எழுந்த இளைஞர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சில மணி நேரம் தேடி மாணவியை மீட்டு, இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இளைஞர் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். குற்றவாளிகளை பிடிக்க, மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் உத்தரவின்பேரில், துணை ஆணையர் தேவநாதன் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் போது, தாங்கள் வந்த மொபட்டை அங்கேயே
    நிறுத்திச் சென்றனர். போலீஸாரின் விசாரணையில் அது திருட்டு மொபட் எனத் தெரிந்தது.

    நள்ளிரவில் சுற்றிவளைப்பு: தொடர்ந்து போலீஸாரின் புலன் விசாரணையில், கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 3 பேர், கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கியிருப்பது தெரிந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர்கள் அர்ஜூன், ஞானசேகரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் நள்ளிரவு வெள்ளக்கிணறு பகுதியில், குற்றவாளி கள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

    போலீஸார் வருவதை அறிந்ததும் அங்கு பதுங்கியிருந்த மூவரும் தப்பிச் செல்ல முயன்றனர். சரணடையும்படி போலீஸார் எச்சரிக்கை செய்தனர். ஆத்திரமடைந்த அவர்கள் அரிவாளால் போலீஸாரை வெட்டினர். அதில் தலைமை காவலர் சந்திரசேகர் காயமடைந்தார். இதையடுத்து போலீஸார் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் தற்காப்புக்காக 3 பேர் காலிலும் சுட்டுப் பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், பிடிபட்டவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்புசாமி (30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்ற தவசி (20) என்பது தெரிந்தது. பின்னர் மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த தலைமை காவலர் சந்திரசேகரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

    மாநகர காவல் ஆணையர் விளக்கம்: கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் கூறியதாவது: கைது செய்யப்பட்ட கருப்புசாமி, காளீஸ்வரன் ஆகியோர் அண்ணன் – தம்பிகள். இவர்கள் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. க.க.சாவடி போலீஸில் திருட்டுவழக்கு, துடியலூர் போலீஸில் அடிதடி வழக்கு, கோவில்பாளையத்தில் வாகனத்திருட்டு வழக்கு, சத்தியமங்கலத்தில் திருட்டு வழக்கு உள்ளது. போலீஸாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள், கடந்த 30 நாட்களுக்கு முன்னர் வெளியே வந்தனர். தவசி இவர்களது உறவினர். காயமடைந்த இளைஞரும், பாதிக்கப்பட்ட மாணவியும் சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை தேறி வருகின்றனர். அவருக்கு கவுன்சலிங் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கைதானவர்களிடம் இருந்து மாணவியின் செல்போன், மோதிரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், தவசி, கருப்புசாமிக்கு 2 கால்களிலும் குண்டு பாய்ந்தது.காளீஸ்வரனுக்கு ஒரு காலில் குண்டு பாய்ந்தது. விரைவில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. 296 (பி),180, 324, 140, 309, கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    coimbatore#rape#accused
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிறப்பு பொதுக்குழு கூட்டம்: கட்சியினருக்கு விஜய் கட்டுப்பாடு
    Next Article தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை
    Editor TN Talks

    Related Posts

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    December 24, 2025

    பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுப்போம்!. விஜய் ட்வீட்!

    December 24, 2025

    மகாத்மா பெயர் நீக்கம்!. தமிழகம் முழுவதும் 400 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!.

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    துருக்கியில் பெரும் விமான விபத்து!. லிபிய இராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலி!

    அசாமில் வெடித்தது கலவரம் – 2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்

    Trending Posts

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    December 24, 2025

    கிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு

    December 24, 2025

    அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.