Close Menu
    What's Hot

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம்!. அன்புமணி!
    தமிழ்நாடு

    பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம்!. அன்புமணி!

    Editor web3By Editor web3January 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கர்லாம்பாக்கம் காலனி கிராமத்தில் கடந்த திசம்பர் 27-ஆம் தேதி இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததற்கும், 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும் அப்பகுதியில் வினியோகிக்கப்பட்ட பாக்டீரியா கலந்த குடிநீரைக் குடித்தது தான் காரணம் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற அடிப்படைத் தேவையைக் கூட நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    கர்லாம்பாக்கம் காலனியில் குடிநீர் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்பட்ட குடிநீரைக் குடித்த ஏழுமலை, சுதா ஆகிய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவத்திற்குப் பிறகு உடல் நலம் தேறியுள்ளனர். இந்த சோகத்தின் சுவடுகள் கர்லாம்பாக்கம் காலனியில் இன்னும் அகலவில்லை.

    பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் வினியோகிக்கப்பட்ட குடிநீரின் மாதிரிகளை எடுத்து சென்னை கிண்டியில் உள்ள மாநில நீர் ஆய்வகத்தில் சோதனை செய்ததில், அந்த நீரில் இ -கோலி எனப்படும் பாக்டீரியா கலந்திருந்ததும், அதனால் தான் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன என்பதும் தெரியவந்துள்ளது. அதே ஊரில் முதன்மை சாலையில் உள்ள குடிநீர் குழாயிலிருந்தும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்தும் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளின் தரம் திருப்தியளிக்கும் வகையில் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கர்லாம்பாக்கம் காலனியில் வினியோகிக்கப்பட்ட குடிநீரில் முறையாக குளோரின் கலக்கப்படாதது தான் பாக்டீரியா கிரிமி தாக்குதலுக்கு காரணம் என்றும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வாழும் பகுதியில் குடிநீர் வழங்குவதில் மிகுந்த அலட்சியம் காட்டப்பட்டிருப்பதும், குடிநீரில் குளோரின் கலக்க வேண்டும் என்ற அடிப்படைக் கடமையைக் கூட திமுக அரசு நிறைவேற்றத் தவறி விட்டதும் உறுதியாகியிருக்கிறது.

    மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று ஆகும். அதற்காக ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதி வழங்குகிறது. அதற்குப் பிறகும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கத் தவறியதற்காக திமுக அரசு வெட்கப்பட வேண்டும். அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றத் தவறிய திமுக அரசுக்கு வளர்ச்சி குறித்து பேச எந்தத் தகுதியும் இல்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கத் தவறிய தோல்விக்கு பொறுப்பேற்று, உயிரிழந்த இருவர் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சமும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் திமுக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபலி எண்ணிக்கை 2,500-ஐ தாண்டியது!. ஈரானில் மோசமடைந்த போராட்டம்!.
    Next Article IND VS NZ 2வது ஒருநாள்!. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு!.
    Editor web3
    • Website

    Related Posts

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    February 16, 2026

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    Trending Posts

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    February 16, 2026

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    February 16, 2026

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.