Close Menu
    What's Hot

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!
    Featured

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    Editor web3By Editor web3February 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udhayanidhi stalin 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடுத்து நிறுத்த சதி நடைபெறுவதை உணர்ந்து தான் முதலமைச்சர் முன்பணமாகவே கோடைக்கால சிறப்பு நிதியை அறிவித்துள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர்கள்  அறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரது வழியில் நமது முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த ‘விடியல் பயண திட்டம்’. இதன் மூலம் தினமும் ஏராளமான மகளிர் பயனடைந்து வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், விலையில்லா மடிக்கணினி திட்டம் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர். தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிர் மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடுத்து நிறுத்த சதி நடைபெறுவதை உணர்ந்து தான் முதலமைச்சர் முன்பணமாகவே கோடைக்கால சிறப்பு நிதியையும் சேர்த்து ரூ.5,000 ஆயிரம் வழங்கி உள்ளார். பொங்கல் பண்டிகைக்கும் ரூ.3,000 கொடுத்தார். மேலும் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,000 உயர்த்தி கொடுப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

    இப்படி தமிழ்நாட்டு மக்களுக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர். இதனால் தான் நமது மாநிலம் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதைப்பற்றி எல்லாம் மத்திய பா.ஜ.க. அரசிடம் கேள்வி கேட்க மறுக்கிறார். அவர் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை.

    எனவே 200-க்கும் மேற்பட்ட தொகுதிகள் நமது கூட்டணி வென்று மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. அதற்கு கட்சியினர் வீடு வீடாக சென்று நமது ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!
    Next Article மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    July 7, 2026

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    July 7, 2026

    பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தோனிக்கு வாழ்த்து மழை; ‘சாதனைகளைத் தாண்டிய மரபை உருவாக்கியவர்’ என ரெய்னா புகழாரம்

    ”அழகு மயில் ஆட…” – ஏகாம்பரநாதர் கோவிலில் நடனமாடிய வீடியோவால் சர்ச்சை!

    பாருயிபூர் சிறுமி பாலியல் வன்கொடுமை – கொலை வழக்கு: மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி

    ”அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் தடுமாறும் நீதிமன்ற விசாரணைகள்” – தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

    கத்தை கத்தையாகப் பணம்; செந்தில்பாலாஜிக்கு அறிமுகமான நரேஷ் வீட்டில் போலீசார் பறிமுதல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.