சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நிர்வாகிகள் மத்தியில் எதிர்பாராத விதமாக அவருக்குத் திடீர் மயக்கமும் தலைச்சுற்றலும் ஏற்பட்டது.
நிகழ்ச்சி முடிந்து படியில் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கிரிஷ் சோடங்கர் மயக்கமடைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி வழங்கினர். பின்னர், கட்சி நிர்வாகிகள் அவரைத் தாங்கிப் பிடித்தபடி வெளியே அழைத்து வந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் சத்தியமூர்த்தி பவனில் சிறிது நேரம் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
