தமிழகத்தில் 34 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 32 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆசியாவில் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கி… சீனா, தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த மாதம் 28ம் தேதி முதல் 58 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 42 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 34 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 32 பேர் குணமடைந்துள்ளனர்.
இது தவிர புதுச்சேரியில் 13 பேரும், கேரளாவில் 15 பேருக்கு, கர்நாடகாவில் 4 பேரும், மகாராஷ்டிராவில் 7 பேரும், டெல்லியில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும் தொடர்ந்து பரிசோதனை செய்து வருவதாகவும், கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிவுறுத்தியுள்ளது.