தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று காலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கவனிக்க வேண்டியுள்ளதால் தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்திருந்தார்.

இருப்பினும், இதன் பின்னணியில், தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உடன் அண்ணாமலைக்கு மோதல் போக்கு நிலவி வருவதாக கூறுகின்றனர். இது வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகளில் இருவருக்கும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு யூகங்களுக்கிடையில் அண்ணாமலை விலகல் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார். தந்தை உடல்நிலை காரணம் என அண்ணாமலையே சொல்லிவிட்டப்பின், ஏன் இதுபோன்ற பொய்யான தகவல் வெளியானது என்று எனக்கு தெரியவில்லை. பாஜகவை பொறுத்தவரை தனிப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version