மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கொடிகம்பங்களை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அக்கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு ,
இந்தியாவின் பெரிய கட்சியாக உள்ள எங்களது கட்சி கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி செயல்பட்டு வருகின்றது.
எங்களது கட்சியின் சின்னமான அருவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே எங்களது கொடியை தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நிறுவி உள்ளோம்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் எங்களது கட்சி கொடி கம்பங்களை அந்தந்த மாவட்டங்களில் அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். ஒரு சில இடங்களில் எந்தவிதமான முன்னறிவிப்பு இன்றியும் கொடிக்கம்பங்களை அகற்றி வருகின்றனர்.
ஆகவே மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்