Close Menu
    What's Hot

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ் ஓபன் சேலஞ்ச்! அப்படி என்ன பேசினார்கள் தெரியுமா?
    Featured

    முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ் ஓபன் சேலஞ்ச்! அப்படி என்ன பேசினார்கள் தெரியுமா?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 27, 2025Updated:December 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 12 27 at 4.53.41 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “சிலர் வாயிலேயே வடை சுடுவார்களே.. அதிமுக ஆட்சியில் 5% திட்டங்களாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா? ” என அதிமுகவை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பதிலடியை கொடுத்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

    முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,773 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசின் தரவரிசைகளில் எல்லாவற்றிலும் நம்பர் 1 ரேங்க் நம்ம தான். நெஞ்சை நிமிர்த்தி, காலரை உயர்த்தி தமிழ்நாடு முன்னேறிக் கொண்டு இருக்கிறது. இதில் 5% ஆவது அ.தி.மு.க ஆட்சியில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா? இது எனது ஓபன் சேலஞ்ச்; தைரியம் இருந்தால் சொல்லுங்கள்” என சவால் விடுத்திருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக, தற்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பாதிக் கேள்விகளை எழுப்பியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவரது பதிவில், “நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த பொம்மை முதல்வரே… நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? நீங்கள் நின்றுப் பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும், அஇஅதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று! அஇஅதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95% வேலையாகக் கொண்ட நீங்கள், 5% திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா? அதற்கு கொஞ்சமாவது உங்களுக்கு தகுதி இருக்கிறதா?

    தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு, Collar-ஐ தூக்கிப் விட்டு பேசுகிறீர்களே… உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா? எத்தனை லேப்டாப் யாருக்கு போய் சேர்ந்தது? தேர்தல் பயத்தில், நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல் தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமை பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா? செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு AI சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், அதே AI சந்தாவை 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது உங்கள் விடியா அரசு. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அறிவார்ந்த மாணவர்களுக்கு தெரியும்.

    திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே, நீங்கள் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது, நீங்கள் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல். இதேபோல், நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா? (கவலை வேண்டாம். மூச்சு இரைக்க வாய்ப்பே இல்லை!) அப்புறம்… ஏதோ Open challenge என்று சொன்னீர்களே… பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது… என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? அஇஅதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா? OPEN CHALLENGE IS STILL ON! (பி.கு. : கேள்வி 1- #நீட்_ரத்து_என்னாச்சு?) என குறிப்பிட்டுள்ளார்.

    முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்கு இடையிலான இந்த வார்த்தை மோதல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகேப்டன் அமெரிக்கா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் வரும் கிறிஸ் இவான்ஸ்!
    Next Article செயல்படாத அதிமுக்கிய ‘ஆதார்’ சேவை மையம்! விழிபிதுங்கும் மக்கள்!
    Editor TN Talks

    Related Posts

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    July 5, 2026

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    July 5, 2026

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    மீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!

    டெல்லியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!. கனமழையால் திருப்பிவிடப்பட்ட 15 விமானங்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.