Close Menu
    What's Hot

    கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை; மோடி கபட நாடகம் போடுகிறார்!. அமைச்சர் ரகுபதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சிலிண்டர் தட்டுப்பாடு!. முன்னேற்பாடுகளை செய்யாமல் மத்திய அரசு அலட்சியம்!. செல்வப்பெருந்தகை!
    தமிழ்நாடு

    சிலிண்டர் தட்டுப்பாடு!. முன்னேற்பாடுகளை செய்யாமல் மத்திய அரசு அலட்சியம்!. செல்வப்பெருந்தகை!

    Editor web3By Editor web3March 10, 2026Updated:March 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selvaperunthagai byte
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை முன்கூட்டியே கணித்து முன்னேற்பாடுகளை செய்யத் தவறிய பாஜக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தினசரி வாழ்க்கையில் அத்தியாவசியமான சமையல் எரிவாயு கிடைக்காமல் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது மிகுந்த கவலைக்குரியது.

    இதனால் உணவகங்கள், சிறு ஹோட்டல்கள் மற்றும் பல சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்த்தப்பட்டதும், முன்பதிவு காலம் 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டதும் பொதுமக்கள் மீது கூடுதல் சுமையாக மாறியுள்ளது. அத்தியாவசியப் பொருளான சமையல் எரிவாயுவில் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்கள்மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.

    மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலையால் கத்தார், ஈரான் போன்ற நாடுகளிலிருந்து எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலைகளை முன்கூட்டியே கணித்து மாற்று ஏற்பாடுகளை முறையாக செய்யாமல் அலட்சியமாக இருந்த ஒன்றிய பா.ஜ.க.அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனவே, பொதுமக்கள் மற்றும் சிறு தொழில்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் சமையல் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை உடனடியாக சீரமைத்து தட்டுப்பாட்டை நீக்க ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் உருவாகாத வகையில் நிலையான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடீயும் , காஃபியும் ஒன்றாக கலக்காது!. NDA கூட்டணியில் விஜய் குறித்து அண்ணாமலை சூசகம்!.
    Next Article வாட்டும் வெயில்!. உடல் சூட்டைத் தணிக்கும் பச்சை வெங்காயம்!. நன்மைகள் இதோ!
    Editor web3
    • Website

    Related Posts

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    March 12, 2026

    பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை; மோடி கபட நாடகம் போடுகிறார்!. அமைச்சர் ரகுபதி!

    March 12, 2026

    ஈரானுடன் ஜெய்சங்கர் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்!. கூடுதல் விவரங்களை கூற முடியாது!. வெளியுறவு அமைச்சகம்!

    March 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை; மோடி கபட நாடகம் போடுகிறார்!. அமைச்சர் ரகுபதி!

    தலைமை தேர்தல் ஆணையரை நீக்குக!. எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!. 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்து!.

    ஈரானுடன் ஜெய்சங்கர் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்!. கூடுதல் விவரங்களை கூற முடியாது!. வெளியுறவு அமைச்சகம்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.