அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டை 7.5 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக உயர்த்துமாறு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டு பின்னர் திமுகவிலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டதால் அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்புகள் கணிசமாக அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும் தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்தின் போது பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித சிறப்பு இட ஒதுக்கீட்டை 10 சதவிகிதமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தையும் மக்கள் ராஜன் சுட்டிக்காட்டினார்.

மேலும் முதலமைச்சர் வழங்கிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் 2025-2026 கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பொறியியல் கல்லூரி சேர்க்கை சிறப்பு இட ஒதுக்கீட்டை 10 சதவிகிதமாக உயர்த்தி நடைமுறைப்படுத்திட வேண்டும் எனவும் மக்கள் ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version