நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கிற்கு தடை கோரி சீமான் தொடர்ந்த வழக்கு விசாரணையை வரும் 12 தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமாரின் குடும்பத்தை பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி சரக வருண் குமார் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது என்றும் வழக்கு விசாரணையில் சீமான் ஆஜராக வேண்டுமென திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், வருண் குமார் ஐபிஎஸ் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் சீமான் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வருண்குமார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது வருண்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.