உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உணவளிக்கும் நிகழ்ச்சி தமிழக வெற்றிக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்களின் ஆணையின் கீழ் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் அறிவுறுத்தலின்படி உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் இன்று பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் K. E. கிருஷ்ணமூர்த்தி, தமிழக வெற்றிக் கழக கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் R. தாமோதரன், ஊத்தங்கரை பேரூராட்சி கழக செயலாளர் M. ரமேஷ், ஊத்தங்கரை மத்திய ஒன்றிய செயலாளர் J. ராமதுரை, ஊத்தங்கரை தெற்கு ஒன்றிய செயலாளர் S. தினேஷ் கண்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் உமாபதி, மத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் சிவா, மேற்கு ஒன்றிய செயலாளர் சக்தி, வடக்கு ஒன்றிய செயலாளர் விக்னேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி மற்றும் ஊத்தங்கரை லீடர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version