Close Menu
    What's Hot

    பெண்களின் ஆடை பற்றி சர்ச்சை பேச்சு: நடிகருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    பாலிவுட் நாவலை காப்பியடித்ததாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கமிஷனை மட்டும் குறியாக கொண்டு செயல்படும் திமுக… இபிஎஸ் காட்டம்…
    தமிழ்நாடு

    கமிஷனை மட்டும் குறியாக கொண்டு செயல்படும் திமுக… இபிஎஸ் காட்டம்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 24, 2025Updated:June 24, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    14 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
    சென்னை எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்க இருப்பது, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையா? மல்டி ஸ்பெஷாலிட்டி விளம்பரக் கட்டடமா? நோயாளிகளின் உயிருடன் விளையாடத் துடிக்கும் முதல்-அமைச்சருக்கு கண்டனம் தெரிவிப்பததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

    பலநூறு கோடி செலவுகளில் கமிஷன் ஒன்றை மட்டுமே குறியாகக்கொண்டு பிரம்மாண்ட கட்டடங்களைக் கட்டுவது மட்டுமே சுகாதாரத் துறையின் முன்னேற்றம் என்று இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு நினைத்துக்கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வேலூரில் 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பென்லாண்ட் மருத்துவமனைக் கட்டட வளாகத்தில் புதிதாக 7 மாடிக் கட்டடத்தைக் கட்டி, அதற்கு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை என்று பெயரிட்டு அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டடத்தை நாளை (25.6.2025), முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், மருத்துவத் துறையின் சார்பில் புதிய அரசு மருத்துவமனைகளைத் திறக்கும்போது அதற்குண்டான புதிய மருத்துவர்களையோ, செவிலியர்களையோ, இதர மருத்துவப் பணியாளர்களையோ நியமிப்பதில்லை என்று மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாத நிலையில், புதிதாக துவக்கப்படும் அரசு மருத்துவமனைகளுக்கு, ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களில் இருந்து சுழற்சி முறையில் அனுப்புவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    ஒரு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை என்றால், அதில் இருதயவியல் துறை, நரம்பியல் துறை, சிறுநீரகவியல், முட நீக்கியல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளும், அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர மற்றும் விபத்து தொடர்பான தனி வார்டுகள் மற்றும் எக்ஸ்ரே அறைகள் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும். இப்படிப்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என்று சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட வேண்டும். வேலூரில் நாளை திறக்கப்பட உள்ள சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் இதுபோன்ற துறைகள், கட்டங்கள் பெயரளவிற்கு உள்ளன. ஆனால், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர் பதவிகள் நிரப்பப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    நாளை திறக்கப்பட உள்ள வேலூர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாத நிலையில், மகப்பேறு துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை மட்டுமே திறக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதர துறைகள் திறக்கப்படுமா என்பது வேலூர் மக்களிடையே பெரும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், இம்மருத்துவமனையில் செயல்பட உள்ள மகப்பேறு துறை மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கும் தேவைப்படும் மருத்துவர்களும், செவிலியர்களும், வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அயற்பணியில் மாற்றப்பட உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு துறையில் 31 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 8 பேர் மட்டுமே பணியாற்றும் நிலையில், இவர்கள் எப்படி இரண்டு இடங்களிலும் முழுமையாக கவனம் செலுத்தி பணியாற்ற முடியும் என்பது தெரியவில்லை.

    ஏற்கெனவே, சேலம், அம்மாபேட்டை அரசு மருத்துவமனை திறக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்த நிலையில், முழுக்க, முழுக்க சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தினமும் 8 மருத்துவர்கள் இங்கு சுழற்சி முறையில் அயற்பணி செய்து வருவதாகவும், திருநெல்வேலியில் புதிதாக திறக்கப்பட்ட கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்கு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து 25 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவதாகவும், இதுபோலவே, கிண்டி உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிசெய்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    2021-ல் திமுக ஆட்சி அமைந்தது முதல், அரசு மருத்துவமனைகள் என்ற பெயரால் கட்டடங்களை மட்டும் திறக்க ஆர்வம் காட்டும் ஆட்சியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிக்காமலும், போதிய மருந்துகளை வழங்காமலும் உள்ள நிலையில், இந்த விடியா ஸ்டாலின் மாடல் அரசு, மருத்துவமனைகளையே நம்பியுள்ள ஏழை, எளிய நோயாளிகளின் உயிரோடு விளையாடும் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருவது கண்டனத்திற்கு உரியதாகும். இதுபோன்ற அவல நிலையால்தான் உணர்ச்சிவசப்படும் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைத் தாக்கும் அவலம் நாள்தோறும் நிகழ்ந்து வருகிறது.

    விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு, ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைப்பதில்லை என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. நானும், இதுகுறித்து சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும் எடுத்துரைத்த பிறகும், எனக்கு பதில் அளிப்பதையே வாடிக்கையாகக் கொண்ட துறையின் அமைச்சர் திரு. சுப்பிரமணியன்-டம் ஓரிரு நாட்களுக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பில், கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில், ‘யார் கூறியது’, ‘என்ன மருந்து இல்லை’ என மிரட்டியது அனைத்து காட்சி ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.

    ‘யார் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலையில்லை’ என்ற ஒரே குறிக்கோளோடு இந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவதால்தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருந்த தமிழக மருத்துவத் துறை இன்றைக்கு பின்தங்கி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. இந்தத் துறையை நிர்வகிக்கும் அமைச்சர் திரு. சுப்பிரமணியன், வாய்ப் பந்தல் போட்டு இந்த உண்மையை மறைத்துவிடலாம் என்று கருதுவது வேடிக்கையாக உள்ளது.

    இந்த நிர்வாகத் திறனற்ற ஆட்சியாளர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, புரட்சித் தலைவரின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

    ‘மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்’

    `ஒருநாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு, அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு!’

    2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலைத் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉயரும் ரயில் கட்டணம்… ஜூலை 1 முதல் அமல்…
    Next Article எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இடையே கடும் வாக்குவாதம்
    Editor TN Talks

    Related Posts

    இயேசுபிரான் காட்டிய அன்பு, சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

    December 25, 2025

    13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

    December 25, 2025

    “பாஜகவின் முதல் அடிமை திமுகதான்” – ஸ்டாலினுக்கு விஜய் சூடான பதில்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண்களின் ஆடை பற்றி சர்ச்சை பேச்சு: நடிகருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    பாலிவுட் நாவலை காப்பியடித்ததாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்-பெங்களூருவில் அதிர்ச்சி

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    பெண்களின் ஆடை பற்றி சர்ச்சை பேச்சு: நடிகருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    December 25, 2025

    பாலிவுட் நாவலை காப்பியடித்ததாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்

    December 25, 2025

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    December 25, 2025

    விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்-பெங்களூருவில் அதிர்ச்சி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.