Close Menu
    What's Hot

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.
    தமிழ்நாடு

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    Editor web3By Editor web3February 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம்
    அதிமுக திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே!

    இது போதாது என்று, தேர்தல் நெருங்குவதும் ஸ்டிக்கர் பித்து அதிகரித்ததோ என்னவோ, அஇஅதிமுக-வின் வரலாற்றுச் சாதனைகள் மீது ஏறி சவாரி செய்ய ஆசைப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே 7.5% திட்டம் குறித்து ஒரு வரலாற்றுப் பொய்யை நாக் கூசாமல் மருத்துவத்துறை அமைச்சர் வாயிலாக பேசியதை, நேற்று சட்டமன்றத்திலேயே தோலுரித்தேன்.

    நேற்று மாலை, தனது தொடர் “ஆடியோ லாஞ்ச் மேடை அரசியலின்” அங்கமாக விளையாட்டு துறை சார்ந்த விழா ஒன்றில் மேடையேறிய முதல்வர், “விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீடு” திட்டத்தின் பலன்கள் மீது தனது பெயரை எழுதிக் கொள்ள முனைந்தது வேடிக்கையாக இருந்தது.

    விளையாட்டு வீரர்களுக்கான அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு என்பது, 2018-ல் எனது தலைமையிலான அதிமுக அரசு 2%-ஆக அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து விளையாட்டு வீரர்கள் அளித்த விழாவில், இந்த இட ஒதுக்கீட்டை 3%-ஆக உயர்த்தி நான் அறிவித்தேன். அதன் பிறகு, 2020-ல் கொரோனா பெருந்தொற்றுக் காலம், 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.

    இதில் ஸ்டாலின் செய்தது என என்ன இருக்கிறது? பணி ஆணைகள் கொடுப்பது போல் போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமே இந்த பொம்மை முதல்வரின் ஒரே பங்களிப்பு.

    7.5% மருத்துவ உள் இடஒதுக்கீடு ஆகட்டும், 3% விளையாட்டு வீரர்களுக்கான ஆகட்டும் – நான் அரசுப்பள்ளியில் படித்தவன், விளையாட்டு வீரர்களின் உணர்வுகளைப் புரிந்தவன் என்ற முறையில், அவர்களுக்காக பார்த்துப் பார்த்துச் செய்த சாதனைத் திட்டங்கள். இதெல்லாம் ஸ்டாலின் போன்றோருக்கு எப்படி புரியும்? இப்படி ஏதாவது ஒரு புதிய சாதனைத் திட்டத்தை ஸ்டாலின் கொடுத்தாரா? இல்லை!

    அதனால், இப்படி எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை எல்லாம் கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளைக் கூறிப் பிரச்சாரம் செய்யப் பாருங்கள்…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். (ஓஹ்ஹ்.. அப்படி எதுவுமே இல்லையோ..??!! சரி, தோல்வி அடைய வாழ்த்துகள்!) இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!
    Next Article கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    February 19, 2026

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    February 19, 2026

    கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    கேப்டனின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது!. தமிழக பாஜக விமர்சனம்!

    அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது!. இபிஎஸ் அட்டாக்!.

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    Trending Posts

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026

    நாடு முழுவதும் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது!

    February 19, 2026

    புதிய கட்சி தொடங்கிய மூத்த அரசியல்வாதி!. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்!

    February 19, 2026

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.