திமுக ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் முதல் அரசு உயர் பதவிகளில் பணியாற்றுபவர்கள் வரையிலும் தங்களது உரிமைகளை போராடி பெறவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், குப்பை வாகன ஓட்டுனர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்டவர்களை போலிசார் கைது செய்தனர்.
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்..
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரப்படுத்துவார்கள் என்ற 2021-ம் ஆண்டு திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஒப்பந்த முறையை ரத்து செய்து மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகத்தை ண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோவை மாநகராட்சியை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு முன்பு இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்
பணி நிரந்தரம் செய்யும் வரை அரசாணை 62-ன் படியும் மற்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படியும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,தொழிலாளர்களிடம் மாதா மாதம் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய சம்பள ரசீதை வழங்க வேண்டும்,ESI மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும்.ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் ரூபாய் 770 சம்பளம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது மாநகராட்சி நிர்வாகம் 540 ரூபாய் மட்டுமே வழங்கி வருவதாகவும் இதன் ஒப்பந்ததாரர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டபோது எந்த விதமான பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் கோவை மாநகராட்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் இல்லாவிட்டால் தீர்வு ஏற்படும் வரை தொடர்ச்சியாக போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. நிலைமையை சீர் செய்ய பேருந்துகளை திருப்பி விடும் பணிகளில் ஈடுபட்ட போலிசாரின் முயற்சியும் தோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை போலிசார் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிசென்றனர்.