Close Menu
    What's Hot

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மெரினா கடற்கரையில் குப்பையை கொட்டாதீர்கள்!. மீறினால் ரூ.5000 அபராதம்!
    தமிழ்நாடு

    மெரினா கடற்கரையில் குப்பையை கொட்டாதீர்கள்!. மீறினால் ரூ.5000 அபராதம்!

    Editor web3By Editor web3January 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    merina bech garbage
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மெரினா உள்ளிட்ட பிற கடற்கரை பகுதிகளில் குப்பைகளை  கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் பெருமையாகவும், சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை தரும் முக்கிய சுற்றுலாதலமாகவும் விளங்கும் மெரினா கடற்கரை, சென்னை மாநகரின் அடையாளமாகத் திகழ்கிறது. மெரினா கடற்கரையை சர்வதேசதரத்தில் மேம்படுத்தி பாதுகாத்திட பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மெரினா கடற்கரையை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பது அனைவரின் பொது பொறுப்பாகும். திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 (Solid Waste Management Rules, 2016)ன்படி, பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக்கழிவுகள், உணவுப் பொருள் எச்சங்கள் உள்ளிட்ட எந்தவிதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பாக, மெரினா கடற்கரையின் தூய்மையை உறுதி செய்வதற்காக Chennai Enviro Solutions Pvt. Ltd (SPV) என்ற தனியார் நிறுவனம் மூலம் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்யும் 7 இயந்திரங்கள் (Beach Cleaning Machines) மற்றும் நாள்தோறும் சுழற்சி முறைகளில் மொத்தம் 274 தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு தொடர்ந்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளிலிருந்து மட்டும் நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள்  அகற்றப்பட்டு வருகின்றது.

    மேலும், பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் நாள்தோறும் சுழற்சி முறைகளில் மொத்தம் 53 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இத்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், பொதுமக்களின் போதியஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால், கடற்கரையில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் உணவுக்கழிவுகள் காணப்படுவதால் அழகற்றதாகவும், சுகாதார குறைபாடுகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. குறிப்பாக, கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை போடாமல், திறந்த வெளிகளில் வீசப்படுகிறது.

    இதன் காரணமாக சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையின் அழகும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதோடு, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே சென்னை நகரின் நற்பெயருக்கும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரைகளுக்கு பெருமளவில் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் போது, அனைவரும் பொறுப்புனர்வோடு குப்பை கழிவுகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் மட்டும் போட்டு, மாநகராட்சியின் தூய்மை பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இதனை மீறி சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையில் குப்பை கொட்டுபவர்கள் மீது உரிய சட்ட விதிகளின் படி ரூ.5,000/– அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதும் இதன்மூலம் கடுமையாக எச்சரிக்கப்படுகிறது. தூய்மையான கடற்கரை – சுகாதாரமான சென்னை – அனைவரின் பொறுப்பு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்காவின் அடுத்த டார்கெட்!. புதின் கைதா?. டிரம்ப் கூறுவது என்ன?
    Next Article ‘இந்தியாவின் 44% நகரங்கள் மோசமான நெருக்கடியில் உள்ளன’!. காங்கிரஸ் குற்றச்சாட்டு!.
    Editor web3
    • Website

    Related Posts

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    April 12, 2026

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    April 12, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    போர்!. ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தோல்வி!. அடுத்து என்ன நடக்கும்?

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    Trending Posts

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    April 12, 2026

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    April 12, 2026

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    April 12, 2026

    போர்!. ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தோல்வி!. அடுத்து என்ன நடக்கும்?

    April 12, 2026

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.