Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.
    தமிழ்நாடு

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    Editor web3By Editor web3April 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jana nayagan stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகப் பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் கடந்த ஜனவரி மாதம் முதல் ரிலீஸ் தள்ளிப்போய் வந்தது. இந்த இழுபறி நீடித்து வந்த நிலையில், படத்தின் சில முக்கியக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து நேற்று முழுத் திரைப்படமும் HD பதிப்பில் இணையதளங்களில் கசிந்துள்ளது.

    சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் லீக் செய்தியால் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாகச் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கசிந்த காட்சிகளையோ அல்லது படத்தையோ பகிர்வது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்பாக வெளியாகும் மிக முக்கியமான படம் என்பதால், இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். மேலும், திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்தத் திருட்டுத்தனமானச் செயலுக்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில், படம் லீக் ஆனதற்குத் தமிழக அரசும் (திமுக), பாஜக-வுமே காரணம் என ஆதவ் அர்ஜுனா நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.  குறிப்பாக உதயநிதி ஸ்டாலினே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் கசிந்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அது குறித்து தான் எவ்வித கருத்தும் பேச விரும்பவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபயிற்சியின்போது வாக்கு சேகரித்தார் முதலமைச்சர். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், ஜனநாயகன் படம் ஆன்லைனில் லீக்காகியிருக்கிறது அதை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்க, ‘இதை பற்றி பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என்றார். அதனையடுத்து, ஜனநாயகன் ரிலீஸ் ஆகாததற்கு உதயநிதிதான் காரணம் என ஆதவ் அர்ஜுனா சொல்லியிருக்கிறார் என்று கேட்க, ‘அப்படியா?.. எனக்கு தெரியாது. ஆதவ் அர்ஜுனா செய்தியை எல்லாம் நான் படிப்பது இல்லை’ என்று குறிப்பிட்டார்.

    ஜனநாயகன் பட பிரச்னை ஆரம்பித்ததிலிருந்தே விஜய் ரசிகர்களும், தொண்டர்களும்; ஏன் விஜய்யே கூட திமுகவைதான் காரணம் காட்டினார்கள். மேலும் அனைத்து விஷயங்களிலும் முதலமைச்சரை விஜய் விமர்சித்தாலும்; அதற்கு மு.க.ஸ்டாலின் எந்த ரியாக்ஷனும் கொடுத்ததில்லை. இப்போதுதான் விஜய் தொடர்பான விஷயத்தில் முதல்முறையாக நேரடியாக ரியாக்ஷன் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!
    Next Article முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.
    Editor web3
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.