தெருவில் ஆதரவின்றி விடப்படும் வளர்ப்பு மற்றும் தெரு நாய்களை பாதுகாக்க விழிப்புணர்வு மற்றும் நிதி திறட்டும் வகையில் நடைபெற்ற நாய்கள் வாக்கத்தான் போட்டியில் மனிதர்களைப் போல நாய்களும் வண்ணமயமான உடைகளுடன் ஸ்டைலாக நடை போட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் தெரு நாய்கள் மற்றும் ஆதரவின்றி தெருவில் கைவிடப்படும் நாய்களை பாதுகாக்க விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டும் வகையில் நாய்களுக்கான வாக்கத்தான் போட்டி நடைபெற்றது. PEPHANDS என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் “வேக் அன் வாக்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த நாய்கள் வாக்கத்தான் போட்டியில் சிப்பிபாரை, கன்னி, ராஜப்பாளையம் என உள்ளூர் இன நாய்களும் புல்லிகுட்டான், லேப்ரோடாக், ஷிட்ஷூ, பாக்சர், கோல்டன் ரிட்ரிவர் என பல்வேறு வெளிநாட்டு இனநாய்களும் கலந்து கொண்டது.
ஒவ்வொரு நாய்களும் வண்ணமயமான ஆடை மற்றும் அணிகலங்களுடன் கலந்து கொண்டது. ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட நாய்கள் அவர்களது உரிமையாளர்களுடன் வாக்கத்தான் சென்றது லையன்ஸ்
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்த வாக்கத்தானில் நாய்கள் டீ சர்ட், பேண்ட், தொப்பி உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ண உடைகளை அணிந்து பங்கேற்றன. கன்னுக்குட்டி அளவுள்ள பெரிய நாய்களும், பூனைக்குட்டி அளவுள்ள சிறிய நாய்களும் என பல்வேறு விதமான நாய்கள் கலந்து கொண்டன. ஏஞ்சல் உடை, மணமகள் உடை என வலம் வந்த நாய் குட்டிகள் காண்போரை கவர்ந்தன. இது தவிர ஆதரவற்ற நாய்கள், பூனைகள் என அழைத்து வரப்பட்டு அதனை நாய் பிரியர்கள் பலரும் தத்தெடுத்து சென்றனர்.
ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட நாய்கள் வாக்கத்தான் சென்றது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.