நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் போதை ஆசாமிகளால் மக்களுக்கு இடையூறு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை குரோம்பேட்டையில் சாலையின் நடுவே சைக்கிளை தள்ளிச் சென்ற போதை ஆசாமியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையில் இருக்கக் கூடிய அனைத்து சாலைகளும் எப்போதும் கூட்டம் நிறைந்தே காணப்படும். குறிப்பாக காலை, மாலை அலுவலக நேரத்தில் மிக அதிக கூட்ட நெரிசல் இருக்கும். ஆங்காங்கே நடைபெறும் மெட்ரோ பணிகளால் சாலைகள் மாற்றிவிடப் பட்டதும் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் எனலாம். அப்படியிருக்க, சில சமயங்கள் இந்த போதை ஆசாமிகள் சாலையில் செய்யும் சில காரியங்கள் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

சென்னையின் குறிப்பிட்ட பிசியான சாலைகளில் ஒன்று குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலை. இந்த சாலையில் நடுவே மர்ம நபர் ஒருவர் சைக்கிளை நட்ட நடு சாலையில் தள்ளிச் செல்வதும், திரும்பி வருவதுமாக சென்றுள்ளார். வாகன ஓட்டிகள் ஒதுங்கிச் செல்ல சொன்னாலும் அதனை கண்டு கொள்ளாமல் சாலையின், நடுவே அங்கும் இங்கும் சைக்கிளை தள்ளிக் கொண்டு அலப்பறை செய்து வந்துள்ளார் அந்த போதை ஆசாமி.

இதனால் வாகன ஓட்டிகள், சாலை நடுவே சைக்கிளை எதிர் திசையில் தள்ளிச் சென்றதால் அச்சமடைந்து சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி விட்டனர். பின்னர் வாகன ஓட்டிகளில் சிலர் அவரை சாலையின் ஓரம் செல்லுமாறு அழைத்து சென்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version